கம்பராமாயணம் 3464 · ஆரணிய 8.62

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

சிலசொல் ஏழாய் - சில சொற்கூறும் பேதைப் பெண்ணே! மேருவைப் பறிக்க வேண்டின் - மேருமலையைப் பெயர்த்தெடுக்க விரும்பினாலும்; விண்ணினை இடிக்க வேண்டின் - வானத்தை இடிக்க விரும்பினாலும்; நீரினைக் கலக்க வேண்டின் - கடல்களிலுள்ள நீரைக் கலக்க விரும்பினாலும்; நெருப்பினை அவிக்க வேண்டின் - வடவா முகாக்கினியை அவிக்க விரும்பினாலும்; பாரினை எடுக்க வேண்டின் - உலகத்தைப் பெயர்த்தெடுக்க விரும்பினாலும்; பலவினை - இப்படிப்பட்ட பல அரிய செயல்களுள்; இராவணற்கு அரிது என் - இராவணன் செய்வதற்கு முடியாத செயல் எது?; யார் எனக் கருதிச் சொன்னாய் என்றான் - (அவனை யார் என்று எளிமைப் படக் கூறினாய் என்று கேட்டான் இராவணன்.

நிலம், நீர் நெருப்பு, வான் ஆகியவற்றைக் கூறியதால் காற்றும் இதனுள் உபலட்சணத்தால் அடங்கும். பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆள்பவன் தன் மனத்தை அடக்கிக் காமத்தை ஆள வலிமையற்றிருக்கும் இராவணன் நிலையை உய்த்துணர வைக்கிறது இம்மொழிகள் 'மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே வான் வீழ்க்குவனே வளி மாற்றுவனெனத் தான் முன்னிய துறைபோகலின் என வேந்தன் உள்ளியது முடிக்கும் சிறப்பைப் பட்டினப்பாலை காட்டும் (பட்டின. 27 - 273). சில சொல், பலவினை என்பவற்றில் முரண்தொடை உளது. சீதை இராவணன் பண்பிற்காணும் முரண்பாடுகளுள் இதுவும் ஒன்றாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If he wished to uproot Mēru, if he wished to bring down the sky,
  2. if he wished to churn up the waters, if he wished to put out fire,
  3. if he wished to lift up the earth, among these many deeds, you foolish woman of few words,
  4. who did you take him for when you spoke? What is too hard for Irāvaṇaṉ?' he said.

What the poem says

Irāvaṇaṉ boasts that Irāvaṇaṉ could uproot Mount Mēru, pull down the sky, churn the seas, put out fire and lift the earth. Nothing is beyond him.

He has mastered all the elements, yet the irony is that he cannot master his own desire. The commentary compares a passage in Paṭṭiṉappālai praising a king's power in similar terms.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' mēruvaip paṟikka vēṇṭiṉ, viṇṇiṉai iṭikka vēṇṭiṉ,
nīriṉaik kalakka vēṇṭiṉ, neruppiṉai avikka vēṇṭiṉ,
pāriṉai eṭukka vēṇṭiṉ pala viṉaic cila col ēḻāy!
yār eṉak karutic coṉṉāy! irāvaṇaṟku aritu eṉ? '' eṉṟāṉ.