கம்பராமாயணம் 3468 · ஆரணிய 8.66

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆற்ற வெந்துயரத்து அன்னாள் ஆண்டு உற்ற அலக்கண் நோக்கின் - (இராமனுக்குற்று) மிகக் கொடிய துயரத்தை அடைந்துள்ள சீதை அப்போது (இராவணன் உருவமாற்றத்தால்) அடைந்த துன்பத்தைக் கருதின்; ஏற்றம் என் நினைக்கல் ஆகும் - அதனைவிட மிக்க துன்பம் வேறு எதை நினைக்க முடியும்?; எதிர் எடுத்து இயம்பல் ஆகும் மாற்றம் ஒன்று இல்லை - இதற்கு ஒப்பாக வேறு சொல்லக் கூடிய சொல் ஒன்றும் இல்லாமல் போயிற்று; செய்யும் வினை இல்லை - அவள் அவனைவிட்டுத் தப்பும் செயலும் தெரியவில்லை; வரிக்கல் ஆகாக் கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர் எனக் குலைவு கொண்டாள் - கட்டமுடியாத யமன் வந்து சேர்ந்த போது உயிர் நடுங்குவது போல நடுக்கம் அடைந்தாள்.

ஆற்ற - மிக அலக்கண் - துன்பம் சஞ்சலமான கண். துன்பம் வரும்போது கண் கலங்கும்; அதனால் அலக்கண் என்பது துன்பத்தைக் குறித்தது. காரியத்தின் பெயர் காரணத்திற்கு வந்த இலக்கணை. சீதை பட்ட துன்பத்தைக் கூறச் சொற்கள் கிடைக்கவில்லை. மாற்று வினை செய்ய வழியும் தெரிய வில்லை. வரித்தல் - கட்டுதல். கூற்றத்திற்கு உயிர்களின் முடிவு வந்ததும் அதைத் தான் கட்டுவதன்றித் தான் கட்டுப்படாத நிலை வரிக்கல் ஆகா என்பதற்கு விரும்பத்தகாத எனவும் உரைப்பர். கூற்றம் - உயிரை உடலிலிருந்து கூறுபடுத்திப் பற்றிச் செல்வதால் இயமனைக் குறித்தது எனவும், சீதைக்கு மாற்றமில்லை, வினையும் இல்லை என்ற திகைப்புண்டாகிய நிலை இது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If one considers the anguish that came upon her there, already in such grievous sorrow,
  2. what greater could one imagine? There was no word
  3. she could say in answer; nothing she could do; like life
  4. when Death, whom none can bind, has come, she trembled.

What the poem says

Cītai, already sick with fear for Irāmaṉ, now faces a far worse terror. No greater misery can be imagined.

She can find no words and sees no way to escape. She trembles like a living creature when Death, whom no one can hold back, has arrived to take it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṟṟa ventuyarattu aṉṉāḷ āṇṭu uṟṟa alakkaṇ nōkkiṉ
ēṟṟam eṉ niṉaikkal ākum? etir eṭuttu iyampal ākum
māṟṟam oṉṟu illai; ceyyum viṉai illai; varikkal ākāk
kūṟṟam vantu uṟṟa kālattu uyir eṉak kulaivu koṇṭāḷ.