கம்பராமாயணம் 3470 · ஆரணிய 8.68

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

அன்னம் - அன்னப்பறவை போன்ற மெல்லியலே!; குலைவுறல் - நடுக்கம் கொள்ள வேண்டாம்; முன்னம் யாரையும் கும்பிடா என் தலைமிசை மகுடம் என்ன - இதற்கு முன் எவரையும் கும்பிட்டு வணங்காத என் தலைகள் மீது மணி முடி போல; தனித்தனி இனிது தாங்கி - ஒவ்வொரு தலையிலும் முறையே இன்பமாக உன்னை உயர்த்தி வைத்துக் கொண்டு; 'அலகு இல் பூண் அரம்பை மாதர் அடிமுறை ஏவல் செய்ய - எண்ணற்ற அணிகலன் பூண்ட அரம்பையர்கள் உன் திருவடிகளில் முறைப்படி நீ இடும் ஏவலைச் செய்ய; உலகம் ஈர் ஏழும் ஆளும் செல்வத்துள் உறைதி என்றான் - பதினான்கு உலகங்களையும் அரசாளும் பெரும் செல்வ வாழ்வில் மகிழ்ந்திருப்பாயாக என வேண்டினான் இராவணன்.

முன் கொண்ட வெகுளி மாற, மீண்டும் இராவணன் காமம் மீதூர இனிய மொழிகளைக் கூறத் தொடங்குகிறான். இவ்வாறு மெய்ப்பாடுகள் மாறி மாறி வரும் நிலையைக் கம்ப நாடகம் நன்கு காட்டுகிறது. இராவணன் யாரையும் வணங்கா நிலை, முன்னர்ச் சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தில் 'வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிறை வயங்க மன்னோ (3069) என்று கூறியதாலும் உணரப்படும். தலை வணங்காத தலைமை நிலை மாறி இருபது தலை மீதும் மணிமுடி போலச் சீதையைத் தாங்குவதாகக் கூறும் போது இராவணனின் வீழ்ச்சி புலனாகிறது. மகளிர் மனத்தைச் செல்வம் மாற்றும் என்ற நினைப்பிலே பதினான்கு உலகங்களையும் ஆளும் செல்வம் பெறுவாள் என்பதையும் கூறுகிறான்.

அன்னம் - உவம ஆகுபெயர் அண்மை விளி ஏற்று வந்துளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Do not tremble, my swan! On my heads, which have never before bowed to anyone,
  2. I will bear you gladly, on each one, like a crown;
  3. with heavenly women in countless jewels serving at your feet in due order,
  4. you shall dwell in the wealth that rules the fourteen worlds,' he said.

What the poem says

Irāvaṇaṉ's anger passes and his desire comes back. He tells Cītai not to be afraid. His heads have never bowed to anyone, but he would wear her on every one of them like a crown.

Heavenly nymphs would serve at her feet, and she would live amid the riches of all fourteen worlds. The poem shows his feelings swinging back and forth, and his promise to bow to her already shows his fall.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' kulaivuṟal, aṉṉam! muṉṉam yāraiyum kumpiṭā eṉ
talaimicai makuṭam eṉṉat taṉittaṉi iṉitu tāṅki,
alaku il pūṇ arampai mātar aṭimuṟai ēval ceyya
ulakam īrēḻum āḷum celvattuḷ uṟaiti '' eṉṟāṉ.