கம்பராமாயணம் 3471 · ஆரணிய 8.69
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(அது கேட்ட சீதை) செவிகளைத் தளிர்க்கையாலே சிக்குறச் சேமம் செய்தாள் - தன் காதுகளை மெல்லிய தளிர் போன்ற கைகளாலே அழுத்தமாக மூடிக் கொண்டாள்; கவினும் வெஞ்சிலைக் கை வென்றிக் காகுத்தன் கற்பினேனை - அழகிய கொடிய வில்லை ஏந்திய கையும் வெற்றியும் உடைய இராமன் திறத்துக் கற்பு பூண்ட (அவன் மனைவியாகிய) என்னை; புவியிடை ஒழுக்கம் நோக்காய் - உலகில் உயர்ந்தோர்க்குரிய ஒழுக்கத்தை எண்ணிப் பாராதவனாய்; பொங்கு எரிப் புனிதர் ஈயும் அவியை நாய் வேட்ட தென்ன - வளர்ந்தெரியும் வேள்வித் தீயில் தூய முனிவர் (தேவர்க்காக) இடும் அவிர்ப்பாகத்தை நாய் விரும்பினாற் போல; என் சொனாய் அரக்க என்னா - என்ன வார்த்தை சொன்னாய் அரக்கனே என்று சொல்லி.
இராவணன் கூறிய சொற்கள் கேட்கத் தக்கன அல்ல ஆதலால் தன் செவிகளைக் கைகளால் மூடிக் கொண்டாள். சிக்கு - கெட்டி உறுதி எனலுமாம். சீதை தன்னை யாரென்று இராவணனிடம் கூறும் போதும் 'காகுத்தன் மனைவி' என்றது (3357) போல இங்கும் அப்பெயரே சுட்டினாள். தேவர்க்குரிய அவி உணவு போல உயர்ந்த கற்புடை நிலையில் சீதை இருப்பதையும் நாய் போல் இழிந்த நிலையில் இராவணன் இருப்பதையும் உவமையால் அறியலாம். 'அவியை நாய் வேட்டதென்ன' என்று உவமை சொன்னவள், அதற்குரிய உவமேயத்தை விரித்துரைக்கவில்லை. கற்புடைத் தேவி அதனைச் சொல்லக் கூசினாள். அதனை விரிக்காமல், 'என் சொன்னாய், அரக்க' என்று வினவி முடித்தாள் - நயத்தக்க நாகரிகம் உணர்க. அடியவரைக் காப்பதால் அழகும் பகைவரை அழிப்பதால் வெம்மையும் கொண்டதாக இராமன் வில் போற்றப் பெறுகிறது. இதுவரை முனிவர் என இராவணனை மதித்த நிலை மாறி 'என் சொன்னாய், அரக்க!' என இழிவு படக் கேட்கிறாள் சீதை. கவினும் - எதிர்காலப் பெயரெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She shut her ears tight with her tender-leaf hands;
- 'Me, faithful wife of victorious Kākuttaṉ, whose hand bears the lovely, cruel bow,
- heedless of right conduct in the world, like a dog craving the oblation
- that holy men offer into the blazing fire, what have you said, demon?' she said.
What the poem says
Cītai covers her ears so as not to hear his words. She is the faithful wife of Irāmaṉ, and for Irāvaṇaṉ to desire her is like a dog lusting after the sacred offering that priests pour into the fire for the gods.
Too modest to spell out the comparison, she only asks, 'What have you said, demon?' She no longer treats him as a holy man.