கம்பராமாயணம் 3476 · ஆரணிய 8.74

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆண்டு ஆயிடை தீயவன் - அப்பொழுது அவ்விடத்தில் அத் தீயவனாம் இராவணன்; அயன் மேல் உரை சிந்தை செயா - பிரமன் முன்னரிட்ட சாபத்தை மனத்தில் எண்ணி; ஆயிழையைத் தீண்டான் - அணிகலன்கள் அணிந்த சீதையின் திருமேனியைத் தொடாதவனாகி; தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால் - கல்தூண்கள் தாம் என்று கூறத்தக்க உயர்ந்த தோள்களின் வலிமையால்; நிலம் கீழொடு மேல் யோசனை கீண்டான் - சீதை இருந்த பூமியின் கீழேயும் பக்கங்களிலும் ஆக ஒரு யோசனை அளவு பெயர்த்தெடுத்தான்.

பிரமனிட்ட சாபம் பின்னர்ச் சடாயு உயிர் நீத்த படலத்திலும் 'தீண்ட அஞ்சுமால் ஆரியன் தேவியை அரக்கன் நல்மலர் பேர் உலகு அளித்தவன் பிழைப்பு இல்சாபத்தால்' (3458) எனவும் கூறப் பெறும். இராவணனுக்கு வேதவதி, அரம்பை, நரி கூபரன், புஞ்சிகத்தலை ஆகியோராலும் சாபங்கள் உண்டு. நிலத்தொடு பெயர்த்தெடுத்த செய்தி கம்பரின் படைப்பு. இவ்வாறு படைத்தது மட்டுமின்றி நூலில் பல இடங்களில் இதனைக் கூறியுள்ளார். யோசனை என்பது ஒரு காத தூரம் எனவும் நாற்காததூரம் எனவும் கூறுவர்.

குபேரனின் அளகாபுரியில் அரம்பையை இராவணன் கற்பழித்த போது அவள் இட்ட சாபம் 'வலிய ஒரு பெண்ணைத் தீண்டின் அவள் கற்புக்கனலால் எரிவாய் என்பதாம் இவ்வாறே நளகூபனும் புஞ்சிகத்தலையும் சாபம் இட்டனர் என்பர் இவ்வாறு இராவணன் பெற்ற சாபம் பற்றிப் பல கதைகள் உள.

இக் காண்டத்தின் முதற் படலத்தில் விராதன் பிராட்டியைப் பற்றித் தூக்கிச் செல்லும் செய்தி வருவது நினையத்தக்கது. வான்மீக இராவணன் தீண்டிக் கவர்தலுக்கும் விராதன் தீண்டிக் கவர்தலுக்கும் வேற்றுமை உண்டு. இவன் காம வயத்தனாய்ப் பெண்மை சிதைக்க நினைப்பவன்; அவனோ விலங்கு நிலையிலனனாய் உணவுக்கு அலைபவன். விலங்கு நிலையினும் கொடியது காமக் கடுங்கனல் என்பது கருத்துப் போலும். இவ் ஒப்பீடு நெடிது நினைதற்கு உரியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then and there the wicked one did not touch the jewelled lady,
  2. keeping in mind the word once laid on him by Brahmā,
  3. and with the strength of his lofty shoulders, like pillars,
  4. he tore up the ground a yōjaṉa deep and wide.

What the poem says

Irāvaṇaṉ does not touch Cītai. He remembers a curse laid on him by Brahmā: if he ever forces himself on an unwilling woman, he will die. Other stories tell of similar curses from women he wronged.

So, with arms like stone pillars, he cuts out the ground she stands on, a whole yōjaṉa deep and wide, and lifts it. Taking her with the earth is Kampaṉ's own invention. In Vālmīki, Irāvaṇaṉ seizes her bodily, as the demon Virātaṉ did earlier in this book.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṇṭu āyiṭai, tīyavaṉ āyiḻaiyait
tīṇṭāṉ, ayaṉ mēl urai cintaiceyā
tūṇtāṉ eṉal ām uyar tōḷ valiyāl,
kīṇṭāṉ nilam; yōcaṉai kīḻoṭu mēl.