கம்பராமாயணம் 3485 · ஆரணிய 8.83

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 ''
''

பொருள் · Meaning in Tamil

அன்னான் வாக்கினால் சொல்ல - அந்த இராவணன் தன் வாயால் இந்தப் பழிமொழிகளைக் கூற; (சீதை அவனை நோக்கி); மாயையால் வஞ்ச மான் ஒன்று ஆக்கினாய் - மாயையினால் ஒரு பொய்ம்மானைக் கற்பித்தாய்; ஆக்கி உன்னை ஆர்உயிர் உண்ணும் கூற்றைப் போக்கினாய் - உனது அரிய உயிரை அழிக்கும் யமன் போன்ற இராமனை வேறு இடத்திற்குப் போகச் செய்தாய்; புகுந்து கொண்டு போகின்றாய் - இங்கு வந்து என்னைக் கவர்ந்து செல்கிறாய்; பொருது நின்னைக் காக்குமா காண்டி ஆயின் - போர் புரிந்து அவரிடமிருந்து உன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் வழியை அறிவாயானால்; உன்தேரை(க்) கடவல் என்றாள் - உன் தேரை மேற்கொண்டு செலுத்தாதே என்று சொன்னாள்.

வாக்கு - வாய், இடத்துத் தோன்றும் பொருள் இடத்திற்கு ஆயிற்று. பொய்ம்மானைக் காட்டி என் கணவனைப் போக்கினாய். என்னையும் அவரில்லாத போது கவர்ந்தாய். இத்தகைய இழிசெயல் செய்யாது தேரை நிறுத்தி நேரிடையாக அவருடன் போர் செய்வாயாக எனச் சீதை கூறினாள்.

உன்னை - உன்னுடைய என்ற பொருளில் வந்தது. இது உருபு மயக்கம். கடவல் - எதிர்மறை ஏவல் வினைமுற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he spoke so with his mouth, she said, By sorcery you made a false deer;
  2. having made it, you sent away the Death that will devour your precious life;
  3. you crept in and are carrying me off; if you can see a way
  4. to fight and save yourself, then do not drive your chariot on.

What the poem says

Cītai answers Irāvaṇaṉ's taunt. He conjured up a magic deer, used it to send away Irāmaṉ, who is Death itself to him, and then slipped in to carry her off while her husband was absent.

If he truly knows how to defend himself in battle, she says, let him stop the chariot and fight Irāmaṉ face to face instead of acting so basely.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vākkiṉāl aṉṉāṉ colla, '' māyaiyāl vañcamāṉ oṉṟu
ākkiṉāy; ākki, uṉṉai ār uyir uṇṇum kūṟṟaip
pōkkiṉāy; pukuntu, koṇṭu pōkiṉṟāy; porutu niṉṉaik
kākkumā kāṇṭi āyiṉ, kaṭaval uṉtērai '' eṉṟāḷ.