கம்பராமாயணம் 3498 · ஆரணிய 8.96

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

ஐயா - ஐயனே; உமர் உய்யாமல் மலைந்து - உம் இனத்தவர் ஆகிய கர தூடணர் முதலியோர் தப்பிப் பிழைக்க முடியாதபடி போர் செய்து; இராமன் ஆர் உயிரை மெய்யாக விருந்திட - இராமன் (அவர்களது) அருமையான உயிரைத் (தனக்கு) உண்மையான விருந்தாகக் கொடுக்க; அந்தகனார் கை ஆரமுகந்துகொடு - யமனார் கை நிறைய வாரி எடுத்து; புதிது உண்டது அறிந்திலையோ - புதிதாக (விருந்து) உண்டதை (நீ) அறியவில்லையோ?, ஏ - அசை.

இராமன் உன் இனத்தவரை ஒருவனாய் நின்று அழித்தமை கண்டும் ஏன் இச்செயல் செய்தாய் என்கிறான் சடாயு. புதிது உண்டது - பல நாள் அரக்கர் தலைவனாம் இராவணனுக்கு அஞ்சி அரக்கர் உயிரைக் கவராத யமன் இராமன் உதவியால் அவர்கள் உயிரைக் கவர்ந்தமை பற்றி இவ்வாறு கூறினார். உமர் - உம் இனத்தவர் ஆகிய கர தூடணர் முதலியோர். அந்தகனார் - எமன். நீ உன் பற்றுக் கோட்டைப் பறி கொடுத்து விட்டாய் என்றபடி. மூவுலகும் பூத்தானை நாபிக் கமலத்துப் பூத்த மாலின் மனைவியாம் திருமகளின் திருவவதாரம் ஆகலின் சீதையைப் பேர் உலகின் மாதா என்றார். திருமால் குற்றமுடையார் மாட்டுச் சினங்கொள்ளுங்கால் புருஷகாரமாக நின்று இன் சொல் கூறிச் சினம் தணிப்பிக்க வல்ல பிராட்டிக்கே அபராதம் எண்ணினை எனவே நினக்கு ஆதாரம் யாரும் இல்லை என்றபடி. ஆதாரம் - பற்றுக்கோடு. மனக்கொடு - மனம் + அத்து + கொடு என அத்துச் சாரியை தொக்க மனக்கொடு என்று ஆயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Fighting your people so that none escaped, when Irāmaṉ
  2. gave their precious lives as a true feast,
  3. Death scooped them up by the handful;
  4. sir, do you not know what a new meal he has had?

What the poem says

Caṭāyu reminds Irāvaṇaṉ of what Irāmaṉ, fighting alone, did to Karaṉ, Tūṭaṇaṉ and their army: he served up their lives as a feast for Yama, the god of death, who gathered them up in handfuls.

The meal was new because for ages Yama, afraid of Irāvaṇaṉ, had not dared to take the lives of demons; only through Irāmaṉ could he do so at last. How, then, could Irāvaṇaṉ dare provoke such a man?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' uyyāmal malaintu, umar ār uyirai
meyyāka irāmaṉ viruntiṭavē,
kai āra mukantu koṭu, antakaṉār,
aiyā! putitu uṇṭatu aṟintilaiyō? ''