கம்பராமாயணம் 3500 · ஆரணிய 8.98
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எல்லா உலகங்களும் - மூவுலகில் உள்ளவர் அனைவரும்; இந்திரனும் - தேவர் தலைவன் ஆகிய இந்திரனும்; அல்லாதவர் மூவரும் - இவர்கள் அல்லாது (உயர்ந்த) மும்மூர்த்திகளும்; அந்தகனும் - யமனும்; புல்வாய் புலிகண்டது போல்வர் அலால் - (இந்த இராமலக்குவரைக் கண்டபோது) மான்கள் புலியைக் கண்டது போல் (அஞ்சி நடுக்கம் அடைவரே அல்லாமல்; வில்லாளனை வெல்லும் மிடுக்கு உளரோ - வில்தொழில் வித்தகனாகிய இராமனை வெல்லுதற்கு உரிய வலிமை உடையர் ஆவரோ? ஆகார்.
உலகத்தவரும், இந்திரனும், மூவரும் எமனும் வில்லாளனைக் கண்டு மான் புலியைக் கண்டது போல் அஞ்சுவார்களே யல்லாமல் அவனை வெல்லும் வலிமை உடையர் அல்லர் என்பதாம். அந்தகன் - அழிவைச் செய்பவன், புல் வாய் - மான், மிடுக்கு - வீரம், வலிமை. மூவர் - தொகைக் குறிப்புச் சொல். புல்வாய் - வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை, காலப் போக்கில் காரண இடுகுறிப்பெயராயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All the worlds, and Intiraṉ,
- and the three gods besides, and Death himself,
- would be like deer that have seen a tiger; apart from that,
- does anyone have the might to defeat that bowman?
What the poem says
Caṭāyu goes on warning Irāvaṇaṉ. All the beings of the three worlds, Indra king of the gods, the three great gods of the Hindu trinity, and Yama the god of death would all tremble before Irāmaṉ like deer that have caught sight of a tiger. None of them has the strength to defeat that master of the bow, so what hope does Irāvaṇaṉ have?