கம்பராமாயணம் 3501 · ஆரணிய 8.99
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இம்மைக்கு - இந்தப் பிறப்பில்; உறவோடும் இறந்தழியும் வெம்மைத் தொழில் - உறவினர்களுடன் இறந்து அழிந்து படுவதற்குக் காரணமான கொடுமையான தொழில்; இங்கு இதன் மேல் இலையால் - இப்பொழுது (நீ செய்த) இச்செயலுக்கு மேல் வேறு ஒன்றும் இல்லை; அம்மைக்கு - (இச்செயல்) மறுமையில்; அருமாநரகம் தருமால் - (உனக்கு) தாங்கரிய பெரிய நரகத்தைத் தரும்; இது எம்மைக்கு இதம் ஆக - (ஆகையால் இச்செயலை) எப்பிறவிக்கு நன்மையாக, நீ எண்ணினை - நீ எண்ணினாய்? இப்பிறவியில் உறவினருடன் இறந்துபடவும் மறுமையில் பொறுத்தற்கரிய நரகினை அடையவும் உரிய இத் தீச் செயலை எப்பிறவிக்கு நன்மை தரும் எனக் கருதி நீ செய்தாய்? இம்மை - இப்பிறவி, அம்மை - மறுமை, எம்மை - எப்பிறவிக்கு. இலை - இடைக்குறை, மாநரகம் - உரிச்சொற்றொடர். இலையால் - தேற்றப் பொருளில் ஆல் வந்தது. ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- For this life, there is no deed more cruel
- than this, which brings death and ruin to you and your kin;
- for the next life, it will bring a great and terrible hell;
- for which life, then, did you think this would do you good?
What the poem says
Caṭāyu argues from both this world and the next. In this life no deed could be more surely fatal: it will bring death to Irāvaṇaṉ and all his relatives. In the life to come it will earn him an unbearable hell. So in which birth, he asks, did Irāvaṇaṉ imagine this crime would benefit him?