கம்பராமாயணம் 3502 · ஆரணிய 8.100
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இம் மானிடர் - (மானுடச் சட்டை தாங்கி உள்ள) மானிடர்; முத்தேவரின் மூல முதற் பொருள் ஆம் அத் தேவர் ஆதலினால் - மூன்று மூர்த்திகளுக்கும் மூல முதல் பொருள் ஆதலால், எத் தேவரொடு எண்ணுவது - (இவர்களை) எந்தத் தேவர்களாகக் கொண்டு நினைப்பது; எண்ணம் இலாய் - ஆய்ந்து அறியும் தன்மை இல்லாதவனே! பித்தேறினை ஆதல் பிழைத்தனை - அறிவு மயங்கினை ஆதலால் (இந்தக் குற்றம்) செய்தாய்; ஆல் - அசை.
இம் மானிடர் முத்தேவருக்கும் மூல முதலானவர் ஆதலால் இவரை எத் தேவரொடு எண்ணுவது. நீ பித்தேறினை ஆதலால் இக் குற்றம் செய்தாய் என்றபடி. பல தேவர்களை ஏவல் கொண்டு வாழ்ந்த நீ இவர்களுக்குச் செய்த பிழை வீணாகாது பயன் தரும் என்பதாம். பித்து - காம மயக்கமும் ஆம், பிழைத்தனை - குற்றம் செய்தாய்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- These men are that very god who is the root and first cause
- of the three gods; and so
- with which god can they be counted? You thoughtless one,
- it is because you have gone mad that you have done this wrong.
What the poem says
Caṭāyu reveals who these men in human guise really are: the supreme being who is the source even of the three great gods. They cannot be compared with any god at all.
Irāvaṇaṉ, who has made many gods his servants, has committed this offence only because he has lost his senses, and the madness may be the delirium of lust. His wrong against these two will not go unpunished.