கம்பராமாயணம் 3503 · ஆரணிய 8.101
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புரம் பற்றிய - முப்புரங்களும் பற்றி எரியச் செய்த; போர் விடையோன் அருளால் - போர் ஆற்றல் உள்ள காளை வாகனனாகிய சிவபிரானது அருளால்; பெற்றவும் வரம் - (நீ) பெற்றுள்ள வரங்களும்; மற்று உள விஞ்சைகளும் - மற்றும் உள்ள போர் வித்தைகளும்; உண்மையினோன் - (அழியா) உண்மைப் பொருளாக உள்ள இராமன்; சாபம் பற்றிய சரம் விடும்தனையே - வில்லில் தொடுத்த அம்பை விடுகின்ற வரையில்; உரம் பெற்றன ஆவன - வலிமை உள்ளனவாம். திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளின் அருளால் நீ பெற்றுள்ள வரமும் மற்றும் உன்னிடம் உள்ள மாயப் போர் ஆற்றலும் உண்மையினோன் வில்லில் அம்பு கோத்து விடும் அளவே நிற்கும், அதற்கு மேல் நில்லா என்பதாம். உண்மையினோன் - சொன்ன சொல்லை நிறைவேற்றும் வாய்மை உடையோன் எனலுமாம். விஞ்சை - வித்தை, சாபம் - வில், உம் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The boons you won by the grace of the warlike rider of the bull,
- who set the cities aflame, and all the other arts you have,
- will keep their strength only until the true one
- lets loose the arrow fitted to his bow.
What the poem says
Caṭāyu tells Irāvaṇaṉ that his boons from Śiva, who burnt the three flying cities and rides a bull, and all his magic arts of war will hold good only until Irāmaṉ, who is truth itself, or the one true to his word, fits an arrow to his bow and lets it fly. After that nothing will protect him.