கம்பராமாயணம் 3504 · ஆரணிய 8.102

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

வான் ஆள்பவன் மைந்தன் - விண் உலகை ஆளும் தசரதனுடைய மகனாகிய இராமன்; வளைத்த விலான் தானே வரின் - வளைத்த வில்லினை உடையவனாய் (நேரில்) தானே வந்து விட்டால்; நின்று தடுப்பு அரிது - அவன் எதிரே நின்று (அவனால் வரும் தீங்கினைத்) தடுப்பது அருமையானது; இந்நன்னுதலை - இந்த அழகிய நெற்றியை உடைய சீதையை; அவண் நானே உய்ப்பென் - முன்பு இருந்த இடத்திற்கு நானே கொண்டு போய்ச் சேர்க்கிறேன்; நீ கடிது போ - நீ விரைவாகப் போய்விடு; என்று புகன்றிடலும் - என்று சடாயு கூறிய அளவில் - கேட்டான் (நிருதர்க்கு இறை என அடுத்த பாடலில் முடியும்).

இராமன் வந்தால் நீ தப்ப முடியாது எனவே இப்பொழுதே சீதையை என்னிடம் விட்டு விட்டு, நீ போய் விடு; நான் அவளை முன்பு இருந்த இடத்திலேயே சேர்த்து விடுகிறேன் என இராவணனிடம் சடாயு கூறினான். வான் ஆள்பவன் - முன்பு நிலவுலகை ஆண்டவன் தற்போது வானுலகை ஆள்கிறான் என்பதாம். தடுப்பு - தடுத்தல், விலான் - இடைக்குறை, முற்றெச்சம் எனலுமாம். நன்னுதல் - பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஆல் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If the son of him who rules the heavens comes himself,
  2. with his bow bent, it will be hard to stand and hold him off;
  3. I myself will take this lady of the fair brow back there;
  4. go, and quickly!, he said, and at that

What the poem says

Caṭāyu ends his warning with an offer. If Irāmaṉ, son of Tacarataṉ, who once ruled the earth and now rules in heaven, arrives with his bow drawn, there will be no withstanding him. So let Irāvaṇaṉ leave Cītai with Caṭāyu and get away fast; Caṭāyu himself will carry her back to where she was. The verse ends mid-sentence, and Irāvaṇaṉ's reaction follows in the next.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' vāṉ āḷpavaṉ maintaṉ, vaḷaitta vilāṉ,
tāṉē variṉ, niṉṟu taṭuppu aritāl;
nāṉē avaṇ uyppeṉ in naṉṉutalai;
pō, nī kaṭitu '' eṉṟu pukaṉṟiṭalum.