கம்பராமாயணம் 3505 · ஆரணிய 8.103

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''
''

பொருள் · Meaning in Tamil

கேட்டான் நிருதர்க்கு இறை - (சடாயு கூறிய சொற்களைக்) கேட்டவனாகிய அரக்கர்க்குத் தலைவன் ஆகிய இராவணன்; கேழ்கிளர் தன் - ஒளி விளங்குகின்ற தன்னுடைய; வாள் தாரை நெருப்பு உக - ஒளியுள்ள கண்ணின் கரு விழியில் இருந்து, சினத் தீ வெளிப்பட; வாய் மடியா - உதட்டைக் கடித்துக் கொண்டு; இனி நீ ஓட்டாய் - இனி மேல் நீ (வீண் சொற்களை) ஓட விடாதே; உரை செய்குநரைக் கடிது காட்டாய் - (நீ) சொல்லுகின்றவர்களை விரைவாகக் காட்டுவாய்; என்று கனன்று உரையா - என்று சினந்து சொல்லி - (இது 19ஆம் பாடலில் உள்ள "என்னும் அளவில்" என்பதோடு சென்று முடியும்)

சடாயுவின் சொல் கேட்ட இராவணன் கண்கள் சிவந்து வாய் மடித்து, 'இனி மேல் பேச வேண்டாம். நீ கூறியவர்களைக் காட்டு' என்று சினந்து சொன்னான். கேழ் - ஒளி. வாள்தாரை - ஒளியுள்ள கண்ணின் கருவிழி, ஓட்டாய் - சொற்களை ஓடவிடாதே. மடியா - செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு வினை எச்சம். ஓட்டாய் - ஒருமை எதிர் மறை ஏவல் வினை. காட்டாய் - ஒருமை உடன்பாட்டு ஏவல் வினை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The lord of the demons heard; from the bright
  2. pupils of his eyes fire poured out; biting his lip,
  3. he blazed with anger and said, Run on no more!
  4. Show me quickly those you speak of!

What the poem says

Irāvaṇaṉ listens to Caṭāyu's warnings with fire flashing from his eyes and his lip clenched between his teeth. Enough talk, he snaps; let Caṭāyu produce these men he keeps speaking of. The sentence continues into the following verse, where Irāvaṇaṉ makes his threat.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kēṭṭāṉ nirutarkku iṟai; kēḻ kiḷar taṉ
vāḷ tārai neruppu uka, vāy maṭiyā,
'' ōṭṭāy iṉi nī urai ceykunaraik
kāṭṭāy kaṭitu '' eṉṟu, kaṉaṉṟu uraiyā.