கம்பராமாயணம் 3506 · ஆரணிய 8.104

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' வரும் புண்டரம் ! வாளி உன் மார்பு உருவிப்
பெரும் புண் திறவா வகை பேருதி நீ ;
இரும்பு உண்ட நிர் மீள்கினும் என் உழையின்
கரும்பு உண்ட சொல் மீள்கிலள் ; காணுதியால் . ''

பொருள் · Meaning in Tamil

வரும் புண்டரம் - (என்னை எதிர்த்து) வருகின்ற கழுகே; உன் மார்பு வாளி உருவி - உனது மார்பினை (எனது) அம்பு ஊடுருவி; பெரும் புண் திறவா வகை - பெரிய புண்ணாகத் திறப்பதற்கு முன்பே; நீ பேருதி - நீ (இவ்விடம் விட்டு) அப்பால் செல்க; இரும்பு உண்ட நீர் மீளினும் - (காய்ச்சப்பட்ட) இரும்பில்பட்ட நீர் மறுபடியும் வெளிப்படும் என்றாலும் கூட; என்னுழையின் - என்னிடத்தில் இருக்கின்ற, கரும்பு உண்ட சொல் மீள்கிலள் - கரும்புச் சாற்றினும் இனிய சொற்களைப் பேசுகிற (சீதை) மீண்டு செல்ல மாட்டாள்; காணுதி - (அதனைக்) காண்பாயாக; ஆல் - ஈற்றசை.

என்னை எதிர்த்து வரும் கழுகே உன் மார்பினை என் அம்பு ஊடுருவிப் பெரும் புண்ணை உண்டாக்குவதற்கு முன்பே நீ அப்பால் செல்க. ஒரு கால் இரும்பு உண்ட நீர் மீண்டும் தோன்றினாலும் கூட இக் கரும்பு உண்ட சொல்லினள் ஆகிய சீதை மீளாள். என்பது கருத்து. புண்டரம் - கழுகு, புண்டரம், கங்கம், எருவை, பவணை, கருஞ்சிறை, உவணம் என்பன கழுகைக் குறிக்கும் வேறு பெயர்களாம். பழுக்கக் காய்ச்சிய இரும்பில் பட்ட நீர் மீண்டும் வெளிப்படாதது போலச் சீதையும் என்னிடம் இருந்து மீள மாட்டாள் என்றபடி. புண்டரம் - அண்மை விளி, கரும்பு உண்ட சொல் - அடையடுத்த சினையாகுபெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. You vulture that comes at me! Before my arrow pierces your breast
  2. and opens a great wound, get out of my way;
  3. even if water swallowed by red-hot iron should come back out, she whose words
  4. are sweet as sugarcane, now in my hands, will not go back; you shall see.

What the poem says

Irāvaṇaṉ warns Caṭāyu to get out of his way before an arrow tears open his chest. Water dropped on red-hot iron vanishes and never comes back; even if that impossible thing happened, Cītai, whose speech is sweeter than sugarcane, would still never be returned. The verse is his flat refusal to let her go.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' varum puṇṭaram! vāḷi uṉ mārpu uruvip
perum puṇ tiṟavāvakai pēruti nī;
irumpu uṇṭa nīr mīḷiṉum eṉṉuḻaiyiṉ
karumpu uṇṭa col mīḷkilaḷ; kāṇutiyāl. ''