கம்பராமாயணம் 3507 · ஆரணிய 8.105
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்னும் அளவில் - என்று (இராவணன்) கூறிய அளவில்; பயம் முன்னின் இரட்டி எய்த - அச்சம் முன்பை விட இரு மடங்காக; அன்னம் அயர்கின்றது நோக்கி - அன்னப்பறவை போன்ற சீதை வருந்துவதைப் பார்த்து; அன்னை - (சடாயு சீதையைப் பார்த்து) அன்னையே; இப்பொழுதே அரக்கன் யாக்கை சின்னம் உறும் - இப்பொழுதே அரக்கனாகிய இராவணனது உடம்பு (பல) துண்டுகளாகும்; நங்கள் மன்னன் மகன் - நமது தலைவன் ஆகிய தசரதனது மகன்; சிலை ஏந்தி வந்திலன் - வில்லைக் கையில் ஏந்தி வந்தானில்லை; என்று வருந்தல் - என்று எண்ணி நீ வருந்தாதே.
இராவணன் விடேன் என்று கூறியதைக் கேட்ட சீதை முன்பைவிட இரு மடங்கு வருந்துவதைப் பார்த்த சடாயு, இப்பொழுதே அரக்கன் உடல் துண்டுகள் ஆகும். மன்னன் மகன் வில்லேந்திக் காக்க வரவில்லையே என்று வருந்தாதே என ஆறுதல் கூறினான். சின்னம் - துண்டு; சின்ன பின்னமாதல் என்ற வழக்கை நினைவுகூர்க. நங்கள் - உளப்பாட்டுத்தன்மைப் பன்மை, அன்னை - அண்மை விளி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he said this, seeing the swan-like lady faint, her fear now doubled,
- Caṭāyu said, The demon's body
- will be cut to pieces this very moment; do not grieve that the son of our king
- has not come bearing his bow, Mother!
What the poem says
Hearing Irāvaṇaṉ swear he will never give her up, Cītai is twice as frightened as before. Caṭāyu comforts her, calling her Mother: let her not grieve that Irāmaṉ, son of their king Tacarataṉ, has not come with his bow to save her, for Caṭāyu himself will hack the demon's body to pieces at once.