கம்பராமாயணம் 3508 · ஆரணிய 8.106
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முத்து உக்கன போல் - முத்துக்கள் சிதறுவன போல; முகத்து ஆலி முலைக் கண் வீழ - முகத்தில் இருந்து (கண்களில் இருந்து) கண்ணீர்த் துளிகள் முலைகளிலே விழுமாறு; தத்துற்று அயரேல் - (மனத்) துடிப்பு மிகுந்து தளராதே; தால பலத்தின் ஏலும் கொத்து ஒப்பன - பனம்பழங்களின் கொத்தினை ஒப்பனவாகிய,; தலை கொண்டு - (இராவணனது) பத்துத் தலைகளைக் கொண்டு; இவன் கொண்டன என்ற ஆசை பத்திற்கும் - இவன் (வெற்றி) கொண்டன என்று கூறப்படுகின்ற திசை பத்திற்கும்; இன்றே பலி ஈவது பார்த்தி - இப்பொழுதே (நான்) பலியாகக் கொடுப்பதை பார்ப்பாயாக; என்றான் - என்று சடாயு கூறினான்.
சீதை அழுது கண்ணீர் விடுதல் கண்ட சடாயு, 'நீ மனந்தளராதே பனம் பழக் கொத்துப் போல் உள்ள இராவணனின் பத்துத் தலைகளையும் அவன் வெற்றி பெற்றதாகக் கூறப்படுகின்ற பத்துத் திசைகளுக்கும் நான் பலியாகக் கொடுக்கப் போவதைப் பார்ப்பாயாக' என ஆறுதல் கூறினான். ஆலி - கண்ணீர். தத்துற்று - கலக்கம் அடைந்து. தாலபலம் - பனம்பழம். ஆசை - திசை. பலி - கடவுளர்க்குத் தரும் உணவு. இங்கு இராவணனின் பத்துத் தலைக்குப் பனம் பழக் கொத்து உவமையாக வந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Do not faint in distress, with tears from your face falling like scattered pearls
- upon your breasts; his heads, like a cluster
- of palmyra fruit, I will take, and to all ten of the directions he boasts of having conquered
- I will offer them as sacrifice today; watch!, he said.
What the poem says
Seeing Cītai's tears fall on her breast like a scattering of pearls, Caṭāyu tells her not to lose heart. Irāvaṇaṉ's ten heads hang together like a bunch of palmyra fruit, and Irāvaṇaṉ claims to have conquered all ten directions; Caṭāyu promises to cut off the heads and offer one to each of those ten directions, as an offering to the gods who guard them.