கம்பராமாயணம் 3510 · ஆரணிய 8.108
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எக்காலமும் - முன்பு எப்பொழுதும்; இன்னது ஓர் ஈடு அழிவுற்றிலாதான் - இத்தகைய ஒரு பெருமை அழிவு அடைந்திராதவனாகிய; அரக்கன் - அரக்கன் ஆகிய இராவணன்; அக்காலை - (தன் கொடி அறுபட்ட) அப்பொழுது; உருக்கு அரக்கு அன்ன கண்ணன் - உருக்கிய அரக்கைப் போன்று (சினத்தால் சிவந்த) கண்களை உடையவனாய்; உலகு ஏழும் நடுங்கிட நக்கான் - உலகம் ஏழும் நடுங்கும்படி சினங்கொண்டு சிரித்தான்; நாகம் அன்ன கைக்கார் முகத்தோடு - மலையைப் போன்று தன் கையில் உள்ள வில்லுடன்; புருவக் கடை குனித்தான் - (தன்) புருவங்களின் நுனியையும் வளைத்தான்.
இதற்கு முன் எப்போதும் இது போல் தன் பெருமை கெடாத இராவணன் சினங் கொண்டு சிரித்துத் தன் வில்லையும் புருவத்தையும் வளைத்தான் என்க. ஈடு - பெருமை. நாகம் - மலை, கார்முகம் - வில். கடைப் புருவம் - புருவ நுனி, நகுதலும் புருவ நுனியை வளைத்தலும் சினக்குறி என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that moment the demon, his eyes like molten lac,
- who had never at any time suffered such a blow to his pride,
- laughed so that all seven worlds trembled; and he bent
- the mountain-like bow in his hand, and the corners of his brows.
What the poem says
Never before has Irāvaṇaṉ's glory been humbled like this, with his banner broken. His eyes turn red as melted lac; he laughs a laugh that shakes all seven worlds, bends his huge bow, and knits the tips of his brows. Laughing and arching the brows are both marks of fury.