கம்பராமாயணம் 3511 · ஆரணிய 8.109
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பிறைவாள் சண்ட எயிற்றான் - பிறைநிலவு போன்ற ஒளி பொருந்திய பற்களை உடைய இராவணனது; சர தாரை மாரி - அம்புகளாகிய மழையின் மிகுதி; மண்ட - (தன்னை) மிகுதியாக நெருங்க; சில சிறகால் அடித்தான் - சடாயு அவற்றுள் சிலவற்றைத் தன் சிறகால் அடித்து விழுத்தினான்; சில வள் உகிரால் கண்டப் படுத்தான் - சிலவற்றைத் தன் கூர்மையான (கால்) நகங்களால் துண்டுபடுத்தினான்; சிலை - வில்லைக்; காலனும் காண உட்கும் துண்டப் படையால் - யமனும் காண அஞ்சும் (தன்) மூக்காகிய படைக் கலத்தால்; துண்ட துண்டங்கள் கண்டான் - துண்டு துண்டுகளாக ஆக்கினான். பிறை நிலவு போன்ற பற்களை உடைய இராவணன் தன்மீது பொழிந்த அம்பு மழையைச் சடாயு சிறகாலும், கூர்மையான கால்நகத்தாலும், இராவணனது வில்லைத் தன் மூக்காலும் துண்டுதுண்டுகளாக ஆக்கினான். சண்டம் - கொடுமையும் ஆம், மண்டுதல் - நெருங்குதல். உகீரால் - உகிரால், நகத்தால் செய்யுள் ஓசைக்காக வந்த நீட்டல் விகாரம். துண்டப் படை - மூக்காகிய படைக்கலம், தாரை மாரி - உருவகம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the pouring rain of arrows from him of the fierce crescent-bright fangs
- closed in, some he struck down with his wings; some with his sharp talons
- he cut to pieces; and with the weapon of his beak, which even Death fears to see,
- he broke the bow into bits and pieces.
What the poem says
Irāvaṇaṉ, whose fangs gleam like the crescent moon, pours a storm of arrows at Caṭāyu. The vulture beats some aside with his wings, shreds others with his sharp talons, and with his beak, a weapon that even Death dreads, smashes Irāvaṇaṉ's bow to pieces.