கம்பராமாயணம் 3512 · ஆரணிய 8.110

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நெடுவெங்கண் அனந்த நாகம் - பெரிய கொடிய கண்களையுடைய அளவில்லாத பாம்புகளை; வாட்டும் கலுழன் என - வாட்டும் கருடன் போல; வன் தலை பத்தின் மீதும் - (இராவணன் உடைய) வலிமையான தலைகள் பத்தின் மேலும்; நீட்டும் நெடுமூக்கு எனும் நேமியன் - (கொத்தி அழிக்க) நீட்டிய நீண்ட மூக்கு என்னும் சக்கரப் படையை உடையவனாய்; சேமவில் கால் கோட்டும் அளவில் - (இராவணன் தன்னைப்) பாதுகாக்கும் மற்ற ஒரு சேமவில்லின் இரு முனைகளையும் வளைத்த அளவிலே; மீட்டும் அணுகா - மறுமுறையும் (அவனை) நெருங்கி, மணிக்குண்டலம் கொண்டெழுந்தான் - (அவன் காதுகளில்) அணிந்துள்ள இரத்தின மணிக்குண்டலங்களைப் பறித்துக் கொண்டு பறந்து எழுந்தான்.

பாம்புகளை வாட்டும் கருடன் போல் வந்து இராவணனது தலையைத் தரையில் உருட்டத் தன் நெடு மூக்கு எனும் சக்கரப்படையை நீட்டிய சடாயு, அவன் சேம வில்லை வளைப்பதற்குள் விரைந்து வந்து அவன் காதில் உள்ள குண்டலங்களைப் பறித்துச் சென்றனன் என்க. சேமவில் - உற்ற காலத்து உதவும் அதிகப்படியான வில். உரிய வில் பழுதாகும் போது சேமவில் பயன்படும். வண்டிக்கு வலிமை சேர்க்க அமைக்கப்படும் அச்சு "சேம அச்சு" என்று கூறப்படுவதையும் ஈண்டு நினைக்க. அனந்தம் - மிகுதி. நேமி - சக்கரம். நேமியன் - முற்றெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Closing in again, like Garuḍa tormenting countless serpents
  2. with long and cruel eyes, he whose discus was his long beak
  3. stretched out over all ten mighty heads, and even as the reserve bow's ends were being bent,
  4. he rose into the air carrying off the jewelled earrings.

What the poem says

Caṭāyu attacks again, like Garuḍa falling on a horde of serpents, his long beak thrust at the ten heads like Viṣṇu's discus. While Irāvaṇaṉ is still bending his spare bow, the reserve weapon kept for when the main one fails, Caṭāyu darts in, tears the jewelled earrings from his ears and soars up with them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mīṭṭum aṇukā, neṭu veṅ kaṇ aṉanta nākam
vāṭṭum kaluḻaṉ eṉa, vaṉ talai pattiṉmītum
nīṭṭum neṭu mūkku eṉum nēmiyaṉ, cēma vil kāl
kōṭṭum aḷavil, maṇik kuṇṭalam koṇṭu eḻuntāṉ.