கம்பராமாயணம் 3524 · ஆரணிய 8.122

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மண் மேல் விழுந்தான் - சடாயு (இராவணனது பொற்கதையால் அடியுண்டு) நிலத்தின் மீது விழுந்தான்; விழலோடும் - (அவ்வாறு அவன்) விழுந்த அளவில்; வயங்கு மான் தேர் - விளங்குகிற குதிரைகள் பூட்டப்பட்ட (தனது) தேரை; கண் மேல் ஒளியும் தொடரா வகை - கண்ணினது பார்வையும் பின்பற்றிச் செல்ல முடியாதபடி; தான் கடாவி - மிக விரைவாகச் செலுத்தி; விண் மேல் எழுந்தான் - (இராவணன் இலங்கையை நோக்கிப் போக) வானத்தில் எழுந்தான்; எழ - (அவன் அவ்வாறு) எழுந்த அளவில்; மெல்லியலாளும் - மென்மைத் தன்மை உள்ள சீதையும்; புண் மேல் வெந்தீ நுழைய - புண்ணில் வெப்பமான நெருப்பு நுழைந்தால்; துடிக்கின்றனள் போல் புரண்டாள் - துடிப்பவள் போல் (துன்பத்தால்) புரண்டாள்.

இராவணனிடம் அடி வாங்கிய சடாயு நிலத்தில் விழுந்தவுடன் அவன் தன் தேரை விரைவாக வானத்தில் செலுத்திக் கொண்டு இலங்கையை நோக்கிப் போகப் புறப்பட்டான். அது கண்டு சீதை புண்ணில் தீ நுழைந்தது போல் துன்புற்று வருந்திப் புரண்டாள். கடாவி - செலுத்தி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He fell upon the earth; and as he fell, the gleaming horse-drawn chariot
  2. the other drove himself, so fast that not even the light of the eye could follow,
  3. and rose into the sky; as he rose, the gentle lady too
  4. writhed, like one in agony as fierce fire enters a wound.

What the poem says

Caṭāyu falls, and the moment he is down Irāvaṇaṉ, now driving the chariot himself since his charioteer is dead, sends it shooting up into the sky towards Ilaṅkai faster than the eye can follow. Cītai, seeing her protector fall, writhes in pain like someone whose open wound has been seared with fire.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇmēl viḻuntāṉ; viḻalōṭum, vayaṅku māṉ tēr
kaṇmēl oḷiyum toṭarāvakai, tāṉ kaṭāvi
viṇmēl eḻuntāṉ; eḻa, melliyalāḷum, ven tī
puṇmēl nuḻaiyat tuṭikkiṉṟaṉaḷ pōl, puraṇṭāḷ.