கம்பராமாயணம் 3525 · ஆரணிய 8.123

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'' ''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1கொழுந்தே அனையாள் குழைந்து ஏங்கிய கொள்கை கண்டான் ;
'' அழுந்தேல் அவலத்திடை ; அஞ்சலை அன்னை ! '' என்னா
எழுந்தான் , உயிர்த்தான் ;'' அட ! எங்கு இனிப் போவது ! '' என்னா ,
விழுந்தான் அவன் தேர் மிசை விண்ணவர் பண்ணை ஆர்ப்ப .

பொருள் · Meaning in Tamil

கொழுந்தே அனையாள் - இளந்தளிர் போன்று (மிக்க மென்மைத் தன்மை உடைய) சீதை; குழைந்து ஏங்கிய கொள்கை கண்டான் - வாடி வருந்திய செயலைக் கண்டவன் ஆகிய சடாயு; அன்னம் - அன்னப்பறவை போன்றவளே; அவலத்திடை அழுந்தேல் - துன்பத்தில் மூழ்க வேண்டாம்; அஞ்சலை - அஞ்சாதே; என்னா - என்று (ஆறுதல் கூறி); உயிர்த்தான் எழுந்தான் - பெருமூச்சு விட்டு எழுந்தான்; அட இனி எங்குப் போவது என்னா - அடே இனி (நீ) எங்கு (தப்பிப்) போவது என்று சொல்லி; அவன் தேர்மிசை - அந்த இராவணனது தேரின் மீது; விண்ணவர் பண்ணை ஆர்ப்ப - தேவர்களின் கூட்டம் (மகிழ்ச்சிப்) பேரொலி செய்ய; விழுந்தான் - பாய்ந்தான்.

மென்மைத் தன்மை உடைய கொழுந்து போன்ற சீதை வருந்துதலைக் கண்ட சடாயு 'அன்னம், அஞ்சி அவலிக்காதே' என ஆறுதல் கூறி இராவணனைப் பார்த்து 'அடே நீ எங்கே தப்பிச் செல்வது' என்று கூறி, விண்ணவர் பண்ணை ஆர்ப்பத் தேர்மிசைப் பாய்ந்தான். கொள்கை - செய்கை. பண்ணை - மகளிர் விளையாட்டாயம். ஈண்டுக் கூட்டத்தைக் குறித்தது. அஞ்சலை - முன்னிலை ஒருமை வினைமுற்று. அன்னம் - உவமையாகு பெயர்; இங்கு அண்மை விளியாய் வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He saw how she, like a tender shoot, wilted and pined;
  2. saying, Do not sink in sorrow; do not fear, my swan!,
  3. he rose and drew breath, and crying, Hey! Where do you think you are going now?,
  4. he fell upon that man's chariot, as the hosts of heaven roared.

What the poem says

Caṭāyu, knocked to the ground, sees Cītai, delicate as a young shoot, wilting with grief. He calls out to comfort her, his swan, telling her not to despair or be afraid. Then he draws breath, gets up, shouts to Irāvaṇaṉ that he will not get away, and dives onto the chariot while the gods cheer.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koḻuntē aṉaiyāḷ kuḻaintu ēṅkiyakoḷkai kaṇṭāṉ;
'' aḻuntēl avalattiṭai; añcalai aṉṉam! '' eṉṉā
eḻuntāṉ, uyirttāṉ;'' aṭa! eṅku iṉip pōvatu! '' eṉṉā,
viḻuntāṉ avaṉ tērmicai viṇṇavar paṇṇai ārppa.