கம்பராமாயணம் 3527 · ஆரணிய 8.125
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
திண் தேர் அழித்து - (சடாயு மேலும் இராவணனது) வலிய தேரை அழித்து; ஆங்கு - அதற்குப் பிறகு; வில் இலாமை - (அவனது கையில்) வில் இல்லாமையால்; மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின் - நெருங்கிச் செய்யும் கொடிய போருக்கு உதவும் அம்புகளைத் தராமையால்; வச்சைமாக்கள் பண்டாரம் ஒக்கின்றன - உலோபிகளுடைய கருவூலத்தை ஒத்து அமைவனவாகி, விண்தான் மறைப்பச் செறிகின்றன - ஆகாயத்தைக் கூட மறைக்கும்படி பொருந்தி உள்ள; அவன் திண் புறம் சேர்ந்த தூணி - அவனது வலிமையான தோள்களின் புறத்தில் கட்டப்பட்டுள்ள, அம்பு அறாத் தூணியை; வள் உகிரால் பறித்தான் - (தன்) கூர்மையான நகங்களால் பறித்து எறிந்தான்.
சடாயு இராவணனது தேரை அழித்து, அவனது முதுகுப் புறத்தில் கட்டியுள்ள அம்பு அறாத தூணியையும் பறித்து எறிந்தான். வச்சைமாக்கள் பண்டாரம் - கொடைக் குணமற்ற உலோபிகளின் கருவூலத்தில் பணம் இருந்தும் பிறர்க்குப் பயன்படாதவாறு போல இராவணன் கையில் வில் இலாமையால் அவனது அம்பறாத் தூணியில் அம்பு இருந்தும் அது பயன்படவில்லை என்றபடி. வச்சை மாக்கள் - உலோபிகள். பண்டாரம் - கருவூலம். திண் தேர் - பண்புத் தொகை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Wrecking the strong chariot, he then went for the quivers on that man's strong back,
- packed so full they could hide the sky, which, since he had no bow,
- could give nothing to the close and bitter fight, and so were like
- the treasure-houses of misers; these he tore away with his sharp talons.
What the poem says
Caṭāyu smashes the chariot and then rips off with his claws the quivers strapped to Irāvaṇaṉ's back. They are crammed with enough arrows to darken the sky, but since Irāvaṇaṉ no longer has a bow they are as useless as a miser's treasury, full of wealth that does nobody any good.