கம்பராமாயணம் 3528 · ஆரணிய 8.126

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
' '

பொருள் · Meaning in Tamil

மார்பினும் தோள்கள் மேலும் - (பின்பு சடாயு இராவணன் உடைய) மார்பின் மேலும் (இருபது) தோள்கள் மேலும்; மாச்சிச்சிரல் பாய்ந்தென - பெரிய சிச்சிலிப் பறவை பாய்வது போல் (பாய்ந்து); சிறகால் ஓச்சிப் புடைத்தான் - (தன்) சிறகுகளால் விரைவாக எறிந்து அடித்தான்; இராவணனும் - அதனால் இராவணனும்; உலையா விழுந்து - வருந்தி விழுந்து; முடிசாய்ந்து மூர்ச்சித்த இருந்தான் - தலை சாய்த்து மயங்கிய நிலையில் இருந்தான்; இத்தனை போலும் - (அத்தன்மை கண்டு சடாயு) இத்தனைதானா; நின் ஆற்றல் - உனது வலிமை; போச்சு எனப்புகன்றான் - போய் விட்டது என்று (இகழ்ச்சியாகக்) கூறினான்.

மாச்சிரல் பாய்வது போல் பாய்ந்து சடாயு இராவணனது மார்பிலும் தோளிலும் தன் சிறகால் ஓச்சிப் புடைத்தான். அதனால் இராவணன் மூச்சற்றுத் தலை சாய்த்து மயங்கி, இருந்தான்; அது கண்ட சடாயு 'இது தானா உன் வலிமை' என இகழ்ந்து கூறினான். சிரல் - சிச்சிலி, மீன் கொத்தி. போச்சு - போயிற்று பேச்சு வழக்கு. உலையா - செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு வினை எச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like a great kingfisher diving, on his chest and on his shoulders
  2. he swung and battered him with his wings; shaken, falling,
  3. Irāvaṇaṉ swooned and sat with his crowns drooping;
  4. Gone! Was that all your strength?, said Caṭāyu.

What the poem says

Darting like a huge kingfisher plunging after a fish, Caṭāyu beats Irāvaṇaṉ's chest and twenty shoulders with his wings until the demon collapses, his crowned heads slumped, unconscious. Caṭāyu mocks him: so that was all his famous strength, and now it is gone. The poet puts a colloquial word into his mouth, gone, as in everyday speech.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māc cicciral pāynteṉa mārpiṉum tōḷkaḷ mēlum
ōccic ciṟakāl puṭaittāṉ; ulaiyā viḻuntu,
mūrccitta irāvaṇaṉum muṭi cāyntu iruntāṉ;
' pōccu; ittaṉai pōlum niṉ āṟṟal? ' eṉap pukaṉṟāṉ.