கம்பராமாயணம் 3533 · ஆரணிய 8.131
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வன்துணை உளன் என - (யான் உனக்கு) வலிமையான துணையாக உள்ளேன் என்று; வந்த மன்னனும் பொன்றினன் - (எதிர்த்து) வந்த கழுகரசனாகிய சடாயுவும் அழிந்தான்; எனக்கு இனிப்புகல் என் - எனக்கு இனிக் கதி என்னவோ; என்கின்றாள் - என்று எண்ணுகின்றவள் ஆகிய சீதை; இன் துணை பிரிந்து இரிந்து - இனிமையான தனது துணையாகிய (ஆண் பறவையைப்) பிரிந்து நீங்கி; இன்னல் எய்திய - (பெருந்) துன்பம் அடைந்த, அன்றில் அம் பெடை என - அன்றில் பறவையின் அழகிய பெட்டை போல; அரற்றினாள் (அரோ) - கதறினாள்.
என்னைக் காக்க வந்த வலிமையான துணைவன் ஆகிய சடாயு அழிந்தான், இனி எனக்கு வேறு புகலிடம் ஏது?' என எண்ணிய சீதை ஆணைப் பிரிந்த அன்றிற் பேடு போலத் துன்புற்றுக் கதறினாள். அன்றில் - ஆணும் பெண்ணும் பிரியாமல் பனை மரத்தில் வாழும் ஒரு வகைப் பறவை என்பது இலக்கிய மரபு. புகல் - சரண்புகுமிடம்; தொழிலாகுபெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even the king who came saying he was my strong protector
- has perished; what refuge do I have now?, she said;
- and like a lovely female aṉṟil bird, torn from her sweet mate,
- driven away and in distress, she wailed.
What the poem says
Cītai cries out that even the mighty king who came to protect her is dead; where can she turn now? She wails like the female of the aṉṟil, a bird that in Tamil poetic tradition lives in palmyra trees in a pair that is never parted, when she has been separated from her mate.