கம்பராமாயணம் 3532 · ஆரணிய 8.130

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வெள்கும் அரக்கன் , நெடு விண் புக ஆர்த்து , மிக்கான் ;
தொள் கின் தலை எய்திய மான் எனச் சோர்ந்து நைவாள் ,
உள்கும் ; உயிர்க்கும் ; உயங்கும் ; ஒரு சார்பு காணாள் ,
கொள் கொம்பு ஒடியக் கொடி வீழ்ந்தது போல் குலைந்தாள் .

பொருள் · Meaning in Tamil

வெள்கும் அரக்கன் - (சடாயுவின் போர் ஆற்றலுக்குத் தோற்றுப் பின் வென்றதால்) வெட்கம் அடைந்த அரக்கனாகிய இராவணன்; நெடுவிண்புக ஆர்த்து மிக்கான் - நீண்ட ஆகாயத்தில் சென்று சேரும் படி பேரொலி செய்து (தன் வலிமையைப்) பாராட்டினான்; தொள்கின் தலை எய்திய மான் என - வலையில் அகப்பட்ட மான் போல, சோர்ந்து நைவாள் - (மனம்) தளர்ந்து வருந்துபவளாகிய சீதை; ஒரு சார்வு காணாள் - (தனக்கு எந்த) ஒரு பற்றுக் கோடும் காணாதவளாய், உள்கும் - (யாது செய்வேன் என) எண்ணும்; உயிர்க்கும் - பெருமூச்சு விடுவாள்; உயங்கும் - மயங்குவாள்; கொள் கொம்பு ஒடிய - ஏறிப்படர்வதற்கு நட்ட கொம்பு ஒடிந்து விழுந்ததனால்; கொடி வீழ்ந்தது போல் - கொடி நிலை குலைந்து வீழ்ந்தது போல; குலைவாள் - (இரதத்தின் மீது விழுந்து) நிலை குலைவாள். சடாயுவின் ஆற்றலால் தன் தேர் பாகன் தண்டாயுதம் ஆகியவற்றை இழந்து தோற்ற இராவணன் வெட்கம் கொண்டு, சடாயுவை அரன் வாளால் அழித்த பெருமையைப் பேரொலி செய்து வெளிப்படுத்தினான். சீதை வலையில் அகப்பட்ட மான் போல் துன்புற்றுக் கொள் கொம்பு ஒடியக் குலைந்து விழுந்த கொடி போல் இரதத்தில் விழுந்து துன்பப்பட்டாள். மிக்கான் - பெருமிதம் கொண்டான். தொள்கு - வலை. சார்வு - பற்றுக்கோடு. காணாள் - முற்றெச்சம். கொள் கொம்பு - வினைத் தொகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The shamed demon swelled with pride, roaring so that it reached the far sky;
  2. she, drooping and wasting like a deer caught in a net,
  3. brooded, sighed, swooned, seeing no support at all,
  4. and collapsed like a creeper when the stake it climbs on snaps.

What the poem says

Irāvaṇaṉ, privately ashamed at having lost his charioteer, his mace and nearly the fight to a bird, now roars to the skies in triumph at having killed Caṭāyu with Śiva's sword.

Cītai is like a deer caught in a net. She broods, sighs and faints, with nothing left to hold on to, and she crumples like a creeper whose supporting pole has broken.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veḷkum arakkaṉ, neṭu viṇ puka ārttu, mikkāṉ;
toḷkiṉtalai eytiya māṉ eṉac cōrntu naivāḷ,
uḷkum; uyirkkum; uyaṅkum; oru cārvu kāṇāḷ,
koḷ kompu oṭiyak koṭi vīḻntatu pōl kulaivāḷ.