கம்பராமாயணம் 3531 · ஆரணிய 8.129

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''

பொருள் · Meaning in Tamil

விரிந்து ஆர்சிறை - விரிந்து பொருந்திய சிறகுகள்; கீழ் உற - (துண்டாகிக்) கீழே கிடக்கும்படி; மண்ணின் வீழ்ந்தனன் - (சடாயு) மண்ணின் மேல் விழுந்தான்; விண்ணோர் இரிந்தார் - (அது கண்டு) தேவர்கள் (அஞ்சி) ஓடினார்கள்; முனிக்கணங்கள் - முனிவர் கூட்டங்கள்; துணை இழந்தாள் என்ன படர் பரிந்தார் - (இச்சீதை தன்) துணையை இழந்து விட்டாள் என்பதால் துன்ப இரக்கம் கொண்டு வருந்தினர்; விண்டுவின் நாட்டவர் - திருமால் வீற்றிருக்கும் வைகுண்டத்தில் வாழ்பவர்; பைம்பொன் மாரி சொரிந்தார் - பசிய பொன் மலர் மாரியைச் சொரிந்தனர்; அது நோக்கிய சீதை துளக்கம் உற்றாள் - (சடாயு விழுந்ததையும், விண்டு நாட்டவர் பொன்மாரி பொழிதலையும்) கண்ட சீதை (உடலும் உள்ளமும்) நடுங்கினாள்.

தன் சிறகுகளை இழந்து சடாயு நிலத்தில் விழுந்தமை கண்டு விண்ணோர் அஞ்சி ஓடினர். முனிவர் வைதேகி துணை இழந்தாள் எனத் துன்பம் கொண்டனர். வைகுண்ட வாசிகளான நித்திய சூரிகள் கற்பக மலர் மாரி பொழிந்தனர். அது நோக்கிய சீதை அஞ்சி நடுங்கினாள். இரிந்தார் - ஓடினார். பரிந்தார் - இரங்கினார். படர் - துன்பம். விண்டுவின் நாட்டவர் - திருமால் வீற்றிருக்கும் வைகுண்டத்தில் வாழ்பவர்களாகிய நித்திய சூரிகள்; அவர்கள் பொன் மலர் சொரிந்து சடாயுவைப் பரமபதத்திற்கு அழைத்துச் செல்வர் என்பதாம். துளக்கம் - நடுக்கம். அது நோக்கிய - பன்மை ஒருமையாக வந்தது செய்யுள் இன்பம் கருதிப் போலும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With his outspread wings lying beneath him, he fell to the earth; the gods
  2. fled; the hosts of sages grieved in pity, saying, She has lost her protector!;
  3. the dwellers of Viṣṇu's world poured down a rain of fresh gold;
  4. Cītai, seeing it, trembled.

What the poem says

Caṭāyu lies on the ground with his severed wings beneath him. The gods flee in fear; the sages grieve that Cītai has lost her only defender. The eternal beings of Vaikuṇṭha, Viṣṇu's heaven, shower golden flowers, a sign that they will lead Caṭāyu to that supreme abode. Seeing him fall and the flowers raining down, Cītai shakes in body and mind.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1virintu ār ciṟai kīḻ uṟa vīḻntaṉaṉ, maṇṇiṉ; viṇṇōr
irintār;'' iḻantāḷ tuṇai! '' eṉṉa, muṉik kaṇaṅkaḷ
parintār; paṭar viṇṭuviṉ nāṭṭavar paimpoṉ māri
corintār; atu nōkkiya cītai tuḷakkam uṟṟāḷ.