கம்பராமாயணம் 3530 · ஆரணிய 8.128
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாற்ற அருந் தெய்வ வாளால் - (யாராலும்) தடுத்தற்கு அரிய தெய்வம் தந்த வாளால்; தலை நலியும் என்றது அன்றியும் - எல்லோருடைய தலையும் தவறாது அழியும் என்பதன்றியும்; வாழ்க்கை நாளும் - ஆயுட் கால நாளும்; மெலியும் கடை சென்றுளது ஆகலின் - குறைவுபட்டு இறுதிக் (காலத்துக்குச்) சென்று அடைந்து விட்டது ஆகையால்; வலியின் தலை தோற்றிலன் - யாருக்கும் (இதுவரை) வலிமையில் தோற்காதவன் ஆகிய சடாயு; விண்ணின் வேந்தன் - தேவர் தலைவன்; குலிசம் எறிய - (தன்) வச்சிரப் படையை வீச; சிறை அற்றது ஒர் குன்றின் வீழ்ந்தான் - (அதனால்) சிறகு அற்று வீழ்ந்த ஒரு மலை போல் விழுந்தான்.
இராவணன் வீசிய தெய்வ வாள் தப்பாமல் எதையும் அழிக்கும் தன்மை உடையது ஆதலாலும், சடாயுவின் வயது எண்ணரும் பருவங்கள் கடந்து முதிர்ந்து முடியும் காலம் நெருங்கி விட்டதாலும் யார்க்கும் தோலாதான் வச்சிரப் படை சிறகு அறுத்த மலை போல் விழுந்தான். குலிசம் - வச்சிரப் படை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He had never lost in strength; but because the divine sword, which none can turn aside,
- destroys whatever head it meets, and also because the days of his life
- had dwindled and come to their end, he fell,
- like a mountain whose wings are cut off when the king of the heavens hurls his thunderbolt.
What the poem says
Caṭāyu, never before beaten in a trial of strength, falls at last. Two things bring him down: the god-given sword, which no one can ward off and which never fails to kill, and the fact that his own very long life has reached its end.
He crashes down like one of the winged mountains of legend whose wings Indra, king of the gods, sheared off with his thunderbolt.