கம்பராமாயணம் 3542 · ஆரணிய 8.140

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' வந்திலர் மைந்தரும் ; மருகிக்கு எய்திய
வெந்துயர் துடைத்தனன் என்னும் மெய்ப் புகழ்
தந்திலர் , விதியினார் , தரும வேலியைச்
சிந்தினர் ; மேல் இனிச் செயல் என் ஆம் கொலோ ? ''

பொருள் · Meaning in Tamil

மைந்தர் தாம் வந்திலர் - என் மக்கள் ஆகிய இராம இலக்குவர் வந்தார்களில்லை; மருகிக்கு எய்திய - மருமகளுக்கு நேர்ந்த; வெந்துயர் துடைத்தனென் - கொடுந்துன்பத்தை நீக்கினேன்; என்னும் மெய்ப்புகழ் தந்திலர் விதியினார் - என்கிற உண்மையான புகழை எனக்குக் கொடுத்திடாத விதியானவர்; தரும வேலியைச் சிந்தினர் - அற வேலியை முறித்து அழித்தவரானார்; மேல் இனிச் செயல் என் ஆம் கொலோ - இனி மேல் விளையும் செயல் என்னாகுமோ?

என் மக்கள் வந்தார்களில்லை, மருகிக்கு நேர்ந்த துயர் துடைத்து யான் மெய்ப் புகழ் பெற விதியினார் இடந்தந்திலர். அவரே அற வேலியை முறித்து அழித்தவரானார். இனி விளையும் செயல் யாதோ என்றபடி. விதியே தரும வேலியைச் சிந்தும் கருவியாக ஆனதால் தருமத்தைக் கொன்று வாழும் அரக்கர்களின் மேல் இனிச் செயத்தகு செயல் யாது உளது என்றபடி. தருமவேலி - உருவகம். கொல் - ஐயப் பொருளில் வந்த இடைச்சொல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. My sons have not come; Fate has not granted me
  2. the true glory of saying, I wiped away the cruel grief that befell my daughter-in-law;
  3. Fate has broken down the hedge of Dharma;
  4. what can be done from here on?

What the poem says

Caṭāyu, who thinks of Irāmaṉ and Ilakkuvaṉ as his own sons and of Cītai as his daughter-in-law, laments that the brothers did not come, and that Fate denied him the honour of saving her.

Fate itself has torn down the fence that protects Dharma. If fate has become the tool for that, what can now be done against the demons who live by destroying righteousness?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' vantilar maintartām; marukikku eytiya
ven tuyar tuṭaittaṉeṉ eṉṉum meyp pukaḻ
tantilar, vitiyiṉār, taruma vēliyaic
cintiṉar; mēl iṉic ceyal eṉ ām kolō? ''