கம்பராமாயணம் 3541 · ஆரணிய 8.139
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரக்கனும் - அரக்கனாகிய இராவணனும்; ஏகினன் - (மேல் கூறியவாறு) சென்றான்; எருவை வேந்தனும் - கழுகுகளுக்கு அரசனாகிய சடாயுவும், மோக வெந்துயர் சிறிது ஆறி - மயக்கம் தந்த கொடிய துன்பத்தில் இருந்து சிறிது தெளிந்து; முன்னியே - (சிறிது) எண்ணிப்பார்த்து; மாகமே நோக்கினன் - இராவணன் சென்ற திசையையே பார்த்து; வஞ்சன் வல்லையில் போகுதல் கண்டு - வஞ்சனை உடைய இராவணன் விரைவாகப் போதல் கண்டு; அகம் புலர்ந்து - மனம் வருந்தி; சொல்லுவான் - (கீழ்க் கண்டவற்றைச்) சொல்லத் தொடங்கினான்.
சடாயு மயக்கம் சிறிது ஆறித் தேறி இராவணன் செல்லும் திசையைப் பார்த்துச் சில சொல்லத் தொடங்கினான். மோகம் - மயக்கம். முன்னி - எண்ணிப் பார்த்து. மாகம் - திக்கு, வானமுமாம். அகம் - மனம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The demon went on his way; and the king of the vultures,
- recovering a little from the cruel pain of his swoon, gathered his thoughts
- and looked up at the sky; seeing the deceiver
- speeding away, he spoke, his heart withering.
What the poem says
Irāvaṇaṉ is gone. Caṭāyu, lying wounded, comes round a little from his faint, collects his thoughts and stares in the direction the deceiver has taken. Seeing him disappear so fast, he begins to speak in grief, and the verses that follow are his musings.