கம்பராமாயணம் 3544 · ஆரணிய 8.142

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

பாம்பணை பஞ்சு அணை ஆக - ஆதிசேடன் என்கிற பாம்புப்படுக்கை பஞ்சு மெத்தை ஆக, பள்ளி சேர் - (அங்கு) திருவனந்தல் செய்தருளுகிற; அஞ்சன வண்ணனே இராமன் - நீல வண்ணனே இராமன்; ஆதலால் - ஆகையால், (அந்த இராமன்); வெஞ்சின அரக்கனால் - கொடிய சினம் உடைய அரக்கனாகிய (இராவணனால்); வெல்லற் பாலனோ - வெல்லுவதற்கு உரியனோ; கள்ள மாயையால் - (ஆகவே அவன்) திருட்டு மாயச் செயலால்; வஞ்சனை இழைத்தனன் - (இத்தகு) வஞ்சனைச் செயலைச் செய்து உள்ளான். இராமன் திருமாலவதாரம் ஆதலால் அவனை எதிர்த்து நின்று வென்று சீதையை எடுத்துக் கொண்டு வந்திருக்க முடியாது. கள்ள மாயையால் தான் அவன் சீதையைக் கவர்ந்து வந்திருக்க வேண்டும் எனச் சடாயு எண்ணினான் என்க. இப்பாடல் சடாயுவின் நுண்ணறிவுத் திறத்தையும், இதுதான் நடந்திருக்க முடியும் என்று உய்த்துணரும் திறமையையும் வாழ்வு அனுபவத்தின் கனியையும் காட்டி நிற்றல் உணர்ந்து மகிழும்படி அமைந்துள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Irāmaṉ is none other than the collyrium-dark one who lies in sleep
  2. with the serpent for his soft cotton bed; and so,
  3. could he be overcome by a demon of fierce anger?
  4. He has worked this treachery by stealthy sorcery.

What the poem says

Caṭāyu reasons it out. Irāmaṉ is Viṣṇu himself, the dark-hued god who sleeps on the serpent Ādiśēṣa as on a soft mattress. No demon, however fierce, could ever defeat him in open combat. So Irāvaṇaṉ must have carried off Cītai by some trick of magic.

The verse shows the old bird's sharp mind and the wisdom of long experience, as he works out exactly what must have happened.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' pañcu aṇai pāmpaṇai ākap paḷḷi cēr
añcaṉavaṇṇaṉē irāmaṉ; ātalāl,
veñciṉa arakkaṉāl vellaṟpālaṉō?
vañcaṉai iḻaittaṉaṉ, kaḷḷa māyaiyāl. ''