கம்பராமாயணம் 3551 · ஆரணிய 8.149

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தெண்திரைக் கலம் என - தெளிந்த அலைகளை உடைய கடலில் ஓடும் மரக்கலம் போல; விரைவில் செல்கின்றான் - வேகமாகச் செல்கின்றவனாகிய இலக்குவன்; புண்டரிகத் தடங் காடு பூத்து - செந்தாமரை மலர்கள் நிறைந்த பெரிய காடு ஒன்று பூத்தல் பெற்று; ஒரு கொண்டல் வந்து இழிந்தன - ஒப்பற்ற கருமேகம் வந்து இறங்கியது போன்ற; கோலத்தான் தனை - திருமேனி அழகு உடைய (இராமனை); கண்டனன் - கண்டான்; மனம் எனக் களிக்கும் கண்ணினான் - தன் மனம் போலவே மகிழ்ச்சி அடையும் கண்களை உடையவனானான்.

விரைவாகச் சென்ற இலக்குவன், இராமனைக் கண்டான் என்க. இராமனின் உடல் நிற அழகுக்குக் கருமேகமும், கண், கை, பாதம், வாய், உந்தி ஆகியவற்றிற்குச் செந்தாமரை மலர்த் தொகுதியும் உவமையாக வந்தன. இராமனைக் கண்ட இலக்குவன் மனம் களித்தது போன்றே தரிசித்த கண்ணும் களித்தது என்க. புண்டரீகம் - செந் தாமரை, செல்கின்றான் - முற்றெச்சம். தடங்காடு - உரிச்சொல் தொடர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Going swiftly, like a ship on the clear-waved sea,
  2. he saw the one whose beauty was like a great forest of red lotuses in bloom
  3. come down on earth as a single rain cloud,
  4. and his eyes rejoiced as his heart did.

What the poem says

Ilakkuvaṉ speeds along like a ship over the waves, and at last he sees Irāmaṉ. The poet paints Irāmaṉ as a dark rain cloud come down to earth, covered in a whole forest of red lotuses in bloom: the cloud is his dark body, and the lotuses his eyes, hands, feet, mouth and navel. Ilakkuvaṉ's eyes rejoice at the sight as much as his heart.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1teṇtiraikkalam eṉa viraivil celkiṉṟāṉ,
puṇṭarīkat taṭaṅkāṭu pūttu, oru
koṇṭal vantu iḻintaṉa, kōlattāṉtaṉaik
kaṇṭaṉaṉ, maṉam eṉak kaḷikkum kaṇṇiṉāṉ.