கம்பராமாயணம் 3552 · ஆரணிய 8.150

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

துண்ணெனும் - கேட்பவர் அஞ்சித் திடுக்கிடும் படி (வெளிப்பட்ட மாரீசனது); அவ்உரை - அந்த (மாயமானின்) சொல்; தொடர - தன் செவியில் சென்று பட; தோகையும் - மயில் போன்ற சாயலை உடைய சீதையும்; பெண் எனும் பேதைமை மயக்க - பெண்மை என்கிற அறியாத தன்மையின் மயக்கத்தால்; பேதினால் - (உண்டாகும்) (மன) வேறு பாட்டினால், உள் நிறை சோரும் என்று - மன உறுதி குலைவாள் என்று; ஊசலாடும் அக்கண்ணனும் - மனத் தடுமாற்றத்தால் வருந்தும் (அந்தக்) கருநிறம் உடைய இராமனும், இளவலைக் கண்ணுற்றான் - (தன்) தம்பியாகிய இலக்குவனைப் பார்த்தான்.

மாரீசனின் மாயக் குரல் கேட்டுப் பெண்மைக்கு உரிய பேதைமையால் சீதை மனம் தடுமாறி வருந்துவாள் என எண்ணித் தடுமாறி வருந்திய இராமன் இலக்குவனைக் கண்டான். இலக்குவன் இராமனைத் தேடிவரும் போது இராமன் மாரீசனது குரலால் சீதை மயங்கி வருந்துவாள் என விரைந்து பர்ணசாலையை நோக்கி வர, இருவரும் இடையில் சந்தித்தனர் என்க. பேதினால் - வேறுபாட்டால். அரோ - ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Thinking, When that startling cry reaches her ears, the peacock-like lady,
  2. confused by the simplicity that belongs to a woman,
  3. will lose her inner firmness, that dark one, swinging between hope and fear,
  4. caught sight of his younger brother.

What the poem says

Irāmaṉ, having killed Mārīcaṉ, the demon disguised as the deer, has heard the demon cry out in his voice as he died. He is torn with worry that Cītai, in her innocence, will be fooled by that terrifying cry and lose her composure. Hurrying back towards the hut, he meets Ilakkuvaṉ coming the other way, looking for him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' tuṇṇeṉum av urai toṭarat tōkaiyum
peṇ eṉum pētaimai mayakkap pētiṉāl
uḷ niṟai cōrum '' eṉṟu, ūcalāṭum ak
kaṇṇaṉum iḷavalaik kaṇṇuṟṟāṉ arō.