கம்பராமாயணம் 3553 · ஆரணிய 8.151

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' புன் சொற்கள் தந்த பகு வாய் அரக்கன் உரை பொய் எனாது , புலர்வாள்
வன் சொற்கள் தந்து மடமங்கை ஏவ , நிலை தேர வந்த மருளே
தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்கு , தனியே
என் சொல் கடந்து , மனமும் தளர்ந்த இளவீரன் வந்த இயல்பே . ''

பொருள் · Meaning in Tamil

என் சொல் கடந்து - சீதையைக் காப்பாய் என்று நான் கூறிய சொல்லை மீறி; மனமும் தளர்ந்த இளவீரன் - மனத் தளர்ச்சியொடு கூடிய இளைய வீரனாகிய (இலக்குவன்); தன் சொல் கடந்து - (இது உண்மையான மானல்ல மாயமான் என்று) தான் கூறிய சொற்களைக் கேட்காது மீறி; தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்கு - (அம் மாயமானின் குரல் என்ன துன்பம் தருமோ என்று) சோர்கின்ற மனத்தை உடையவனாகிய, என்னைத்தேடி (என்) பக்கத்திற்கு; தனியே வந்த இயல்பே - தனித்து வந்த நிலையானது; மடமங்கை - பேதைப் பண்புள்ள சீதை, புன்சொற்கள் தந்த பகுவாய் அரக்கன் உரை பொய் எனாது - பொய்ச் சொற்களைக் கூறிய பிளவுபட்ட வாயை உடைய அரக்கனாகிய (மாரீசனது) சொற்கள் பொய்ம்மையும் வஞ்சனையும் உடையவை என்று கருதாது; புலர்வாள் - (உடலும் உள்ளமும்) வாடுபவள் ஆகிய சீதை, வன்சொற்கள் தந்து - கடுமையான சொற்களைச் சொல்லி; ஏவ - ஏவியதால்; நிலை தேரவந்த மருளோ - (என் நிலை பற்றித் தான் அறிந்தவனாயினும் சீதையின் பொருட்டு) என் தன்மையை அறிய வந்த மயக்கச் செயலோ? (அடுத்த பாடலில் தொடரும்).

இலக்குவன் இது மாயமான் என்று கூறியதைக் கேட்காது "இல்லாததில்லை இளங்குமரா" என மானைத் தொடர்ந்து சென்று உண்மை அறிந்து எய்து வீழ்த்த, அவ்வரக்கன் வஞ்சனைச் சொல்லெழுப்பினான். அது கேட்ட சீதை பெரிய பேதைமைப் பெண்மையால் எனக்குத் தீங்கு என வருந்தி ஏவ, என் சொற்கடந்து இலக்குவன் வருகின்றானோ என இராமன் மனந்தளர்ந்து கருதினான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Did the simple young lady, wasting away, not taking as a lie the words of the gape-mouthed demon
  2. who spoke those base words, drive him with harsh words to come and learn how I fared?
  3. Is that the bewildering reason why, to me, whose heart is failing because I ignored his word,
  4. the young hero has come alone, his own heart failing, having gone against my word?

What the poem says

Seeing Ilakkuvaṉ alone, Irāmaṉ guesses what has happened. He himself ignored Ilakkuvaṉ's warning that the deer was a demon's trick, and his heart is now sinking. Ilakkuvaṉ, for his part, has disobeyed Irāmaṉ's order to guard Cītai.

Irāmaṉ suspects that Cītai, innocent and frightened, believed the gaping-mouthed demon's lying cry and drove Ilakkuvaṉ off with harsh words to go and find out how Irāmaṉ was. The thought continues in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' puṉ coṟkaḷ tanta pakuvāy arakkaṉ urai poy eṉātu, pularvāḷ
vaṉ coṟkaḷ tantu maṭa maṅkai ēva, nilai tēra vanta maruḷō
taṉ col kaṭantu taḷarkiṉṟa neñcam uṭaiyēṉ maruṅku, taṉiyē
eṉcol kaṭantu, maṉamum taḷarnta iḷavīraṉ vanta iyalpē. ''