கம்பராமாயணம் 3563 · ஆரணிய 8.161
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நெடுந்தகையோன் - பெருமைப் பண்புகள் உள்ளவனாகிய இராமன்; அறத்தைச் சீறும்கொல் - அறத்தைச் சீறுவானோ?; அருளையே சீறும் கொல் - கருணைப் பண்பையே சீறுவானோ?; அமரர் திறத்தைச் சீறும் கொல் - தேவர்களின் தன்மையைச் சீறுவானோ?; முனிவரைச் சீறும் கொல் - முனிவர்களைச் சீறுவானோ?,; தீயோர் மறத்தைச் சீறும் கொல் - தீய அரக்கர்களின் கொடுமையைச் சீறுவானோ?; மறையின் திறத்தைச் சீறும் கொல் என்று - வேதங்களின் தன்மையைச் சீறுவானோ? என்று எண்ணி; என்கொலோ முடிவு என நடுங்கா - (அவன் சினத்தின் முடிவு) என்ன முடிவு ஆகுமோ என்று நடுங்கி, (அடுத்த பாடலில் தொடரும்.
அறங்காக்க வந்த தனக்கு உதவாத அறம் முதலிய அறச்சார்புப் பொருள்களையும் அதற்கு எதிரிடையான மறச்சார்புப் பொருளையும் இராமன் சீறுவானோ என்றபடி, திறம் - தன்மை. கொல் - ஐயப்பொருள் தருவதோர் இடைச் சொல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Will he rage at Dharma? Will he rage at Grace itself? Will he rage
- at the race of the immortals? Will he rage at the sages? Will he rage
- at the cruelty of the wicked? Will he rage at the very nature
- of the Vedas? What will the end be?, so they trembled at the noble one.
What the poem says
All creation trembles, wondering where Irāmaṉ's anger will fall. Will he turn on Dharma itself, or on Grace, on the gods, on the sages, on the Vedas, all of which failed to help him, though he came to earth to protect righteousness? Or will he turn on the cruelty of the wicked? No one knows how it will end. The sentence continues into the following verse.