கம்பராமாயணம் 3566 · ஆரணிய 8.164

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'' ''

பொருள் · Meaning in Tamil

அமலனும் - குற்றம் அற்றவன் ஆகிய இராமனும்; 'ஆம் அதே இனி அமைவது' என்று - ஆம் அச் செயலே இனிச் செயத்தக்கது என்று கூறி; வயவர் - வீரர்களாகிய இராமலக்குவர்; தாமவார் கணைப்புட்டிலும் முதலிய மெய்யில் தாங்கி - மாலை போல் அமைந்த நீண்ட அம்பு அறாத்தூணி முதலிய (படைக்கலங்களை) உடம்பில் தரித்துக் கொண்டு; வாம மால் வரை - அழகுள்ள பெரிய மலைகள் (மற்றும்); மரன் இவை மடிதர - மரங்கள் ஆகிய இவை அழியும் படி; பூமிமேல் அவன் தேர் சென்ற நெடுநெறி போனார் - பூமியில் அந்த இராவணனது தேர் சென்ற நீண்ட வழியில் சென்றார்கள்.

அமலன், 'இனிச் செயத்தக்கது நீ கூறிய வாறே' என ஏற்றுக் கொண்டான். உடனே இருவரும் படைக்கலந்தாங்கி இராவணன் தேர் சென்ற வழியில் சென்றனர். தாமம் - மாலை போன்ற வடிவுடைய. வார் - நீண்ட. புட்டில் - அம்பு அறாத்தூணி. வாமம் - அழகு. வயவர் - வீரர். மரன் - கடைப்போலி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Yes, that is what must be done now, said the Spotless One; and putting on
  2. their quivers of long arrows ranged like garlands, and their other arms,
  3. the warriors went along the long track that his chariot had taken over the earth,
  4. where fair great mountains and trees had been flattened.

What the poem says

Irāmaṉ agrees that pursuit is the only course. The two warriors strap on their quivers, packed with long arrows like garlands, and their other weapons, and follow the long trail Irāvaṇaṉ's chariot has left across the land, a path on which hills and trees lie crushed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' ām; atē iṉi amaivatu '' eṉṟu, amalaṉum, meyyil
tāma vārkaṇaip puṭṭilum mutaliya tāṅki
vāma māl varai maraṉ ivai maṭitara, vayavar,
pūmimēl avaṉ tēr ceṉṟa neṭuneṟi pōṉār.