கம்பராமாயணம் 3565 · ஆரணிய 8.163
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தேரின் ஆழியும் தெரிந்தனம் - தேரினது சக்கரங்கள் கண்டோம்; தீண்டுதல் அஞ்சி - சீதையைத் தொடுவதற்கு அஞ்சிப்; பாரினோடு கொண்டு அகழ்ந்ததும் பார்த்தனம் - நிலத்தோடு பெயர்த்துக் கொண்டு சென்றுள்ளதையும் பார்த்தோம்; ஈது என் என்பது - இது எவ்வாறு நடந்தது என்று கருதுவது?; உரன் இலாதவர் போல் - வலிமை இல்லாதவர் போல; ஓரும் தன்மை பயன் இன்று - எண்ணிக் கொண்டிருப்பதால் பயன் எதுவும் இல்லை; தூரம் போதல் முன் தொடர்தும் - (நிலத்தொடு கொண்டு போனவன்) நீண்ட தூரம் போவதற்கு முன்பே (அவனைப் பின்) தொடர்வோம்; என்று இளையவன் தொழலும் - என்று கூறி இளையவனாகிய இலக்குவன் வணங்கிய அளவில், (அடுத்த பாடலில் தொடரும்.)
தேரின் சுவடுகளையும், நிலத்தொடு கொண்டு போனதையும் கண்டோம். எனவே, இது யாரால் எவ்வாறு நடந்தது என்று வலிமை இல்லாதவர் போல் எண்ணிக் கொண்டிருப்பதை விட அவனைத் தொடர்ந்து போதலே தக்கது என்று இலக்குவன் கூறி வணங்கினான். ஆழி - சக்கரம். உரன் - வலிமை. தெரிந்தனம் - தன்மைப் பன்மை வினைமுற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- We have made out the wheels of a chariot; we have seen too
- how, afraid to touch her, he dug her up with the ground; there is no use
- in pondering, What is this?, like men with no strength;
- let us pursue him before he goes far, said the younger brother, bowing.
What the poem says
Ilakkuvaṉ keeps his head. They have seen the tracks of chariot wheels, and the hole where the ground was dug out, which shows the abductor was afraid to touch Cītai. There is no point standing there wondering helplessly what has happened, he says; they must follow at once, before the abductor gets too far. He bows to his brother as he says this.