கம்பராமாயணம் 3571 · ஆரணிய 8.169

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

ஐய - இளவலே; நோக்கினால் - எண்ணிப் பார்த்தால்; நொய்து இவண் எய்திய - விரைவாக இங்கு வந்து சேர்ந்த; நுந்தை - நின் தந்தையான (சடாயுவினது); மூக்கினால் இது முறிந்தமை முடிந்ததால் - மூக்கினால் இக்கொடி முறிந்திருக்க வேண்டும் என்பது முடிவாகத் தெரிகிறது; மொய்ம்பின் தாக்கினான் - மிக வலிமையாகத் தாக்கி இருக்க வேண்டும்; நடு அடுத்தது தெரிகிலம் - (அவருக்கு) நடுவில் நேர்ந்தது என்ன என்று அறியக் கூடவில்லை; தமியன் - (அவரே) தனித்தவர் (துணையென யாருமில்லை), யாக்கை தேம்பிடும் - உடல் வலி மிக மெலிந்திடும்; எண் அரும் பருவங்கள் இறந்தான் - கணக்கிட அருமையான நீண்ட காலம் (வாழ்ந்து) கழித்தவர்.

'ஐய, இவ்வீணைக் கொடி முறிந்திருக்கும் தன்மையை நோக்கினால் இது சடாயுவினது அலகால் முறிந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அவர் நீண்ட காலம் வாழ்ந்து உடல் மிக மெலிந்த நிலையிலும் மிக வலிமையாகத் தாக்கியிருப்பார் போலும்; இடையில் அவருக்கு என்ன நேர்ந்ததோ தெரிகிலம்' என இலக்குவனிடம் இராமன் கூறினான். நொய்து - விரைவாக, எளிமையாக எனினுமாம். "நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன்" (பாயிரம் 5) என வருதலைக் காண்க. மொய்ம்பு - வலிமை, நடு அடுத்தது - நடுவில் நேர்ந்தது, தேம்புதல் - உடலோ மனமோ தளர்ந்து வருந்தல்.

தெரிகிலம் - தன்மைப் பன்மை வினைமுற்று. யாக்கை - தொழிலாகுபெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Looking at it, brother, it is clear that your father, who came here swiftly,
  2. broke this with his beak; he struck with great might;
  3. what happened in between we cannot tell; he is alone;
  4. his body grows feeble; he has lived through ages beyond counting.

What the poem says

Irāmaṉ reads the evidence. The banner was clearly broken by the beak of Caṭāyu, whom he calls Ilakkuvaṉ's father, since the old bird was like a father to them both. He must have flown here fast and fought with great force.

But what happened next they cannot know, and Irāmaṉ is anxious: Caṭāyu was fighting alone, and he is very old, having lived through countless ages, and his body must be frail.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' nōkkiṉāl, aiya! noytu ivaṇ eytiya nuntai
mūkkiṉāl itu muṟintamai muṭintatāl; moympiṉ
tākkiṉāṉ; naṭu aṭuttatu terikilam; tamiyaṉ;
yākkai tēmpiṭum; eṇ arum paruvaṅkaḷ iṟantāṉ. ''