கம்பராமாயணம் 3572 · ஆரணிய 8.170

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

சாலவும் நன்று - (இது) மிகவும் நன்மையாயிற்று; நடுக்கு அரும் மிடுக்கினன் - (மற்றவரால்) அசைக்க முடியாத வலிமை உடையவனான (அந்தச் சடாயு); பொழுது எலாம் தடுப்பது திடனால் - (பகைவனை) இன்றைப் பொழுது முழுவதும் தடுத்து நிறுத்துவது திண்ணம்; நாமும் சென்று கூடல் ஆம் - (அதற்குள்) நாமும் (அங்கு சென்று) அவரோடு சேரலாம்; வென்று மீட்கினும் மீட்குமால் - (அதற்குள் அவர் தானே) வெற்றி பெற்றுச் (சீதையை) மீட்டாலும் மீட்டு விடுவார்; வேறுற எண்ணி நின்று தாழ்த்து ஒரு பயன் இலை - வேறு விதமாகப் பலவற்றை எண்ணிக் கொண்டு இங்கு நின்று காலம் தாழ்த்துவதால் ஒரு பயனும் இல்லை; என்றலும் - என்று (இலக்குவன்) கூறிய உடன்; நெடியோன் - உலகளந்தவனாகிய இராமன், (அடுத்த பாடலில் தொடரும்).

நடுக்கறு வலி படைத்த சடாயு எதிர்த்துப் போர் செய்திருந்தால், அது மிக நல்லது. அவர் பகைவரை இன்றையப் பொழுது முழுவதும் எதிர்த்துப் போரிடுவார். அதற்குள் நாம் அங்கு அவருக்குத் துணையாகச் சென்று சேரலாம். அதற்குள் அவரே ஒரு வேளை எதிரிகளை வென்று சீதையை மீட்டாலும் மீட்டு விடுவார். பலவாறு எண்ணிக் காலம் தாழ்த்துவதால் ஒரு பயனுமில்லை என்று இலக்குவன் இராமனிடம் கூறினான். சால - மிகுதி. மிடுக்கு - வலிமை. திடன் - திண்ணம். சால - உரிச்சொல்; ஆல் - இரண்டும் அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. This is very good; his strength is not easily shaken; we too
  2. can go and join him, for surely he will hold the foe off all day long;
  3. he may even win and rescue her himself; there is no use
  4. in standing here delaying, thinking of other things, said the younger brother; and the Tall One

What the poem says

Ilakkuvaṉ sees good news in the broken banner. Caṭāyu's strength is not easily shaken; he will certainly hold the enemy back all day, giving the brothers time to reach him, and he might even defeat the abductor and rescue Cītai himself. Speculating will only waste time. The sentence continues with Irāmaṉ's response in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' naṉṟu cālavum; naṭukku arum miṭukkiṉaṉ; nāmum
ceṉṟu kūṭal ām; poḻutu elām taṭuppatu tiṭaṉāl;
veṉṟu, mīṭkiṉum mīṭkumāl; vēṟuṟa eṇṇi,
niṉṟu tāḻttu oru payaṉ ilai '' eṉṟalum, neṭiyōṉ.