கம்பராமாயணம் 3574 · ஆரணிய 8.172
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இலக்குவ - இலக்குவனே; சிலை கிடந்ததால் - (இங்கே ஒரு) வில் கிடக்கின்றது; தேவர் நீர் கடைந்த மலை கிடந்தென வலியது - (அவ்வில்) தேவர்கள் பாற்கடலைக் கடையப் (பயன்படுத்திய) மந்தர மலை நிலத்தில் கிடப்பது போல வலிமை உடையது; வடிவினால் மதியின் கலை கிடந்தன்ன காட்சியது - வடிவத்தால் பிறைச் சந்திரன் போன்ற காட்சி அமைப்புக் கொண்டது; இது கடித்து ஒடித்தான் - இவ்வில்லை தன் மூக்கால் கொத்தி ஒடித்திட்டவன் ஆகிய (சடாயுவினது); நிலை கிடந்தவா நோக்கு என - வலிமை இருந்த தன்மையைப் பார் என்று; நோக்கினன் நின்றான் - (இராமன் அவனது தன்மைகளைப் பற்றி) எண்ணிக் கொண்டு நின்றான்.
தொடர்வதே நலம் எனத் தொடர்ந்து சென்ற இராமலக்குவர் வழியில் மந்தர மலையைப் போலவும், பிறைச் சந்திரனைப் போலவும் காணப்பட்ட வில் ஒன்று கிடந்ததைக் கண்டனர். அதைக் கண்ட இராமன் அவ்வில்லை ஒடித்திட்டவனாகிய சடாயுவினது வலிமையைப் பற்றி எண்ணிக் கொண்டு நின்றான். மலை - மந்தரம். வில்லின் வலிமைக்கு மந்தர மலையும் வடிவத்துக்குப் பிறைச் சந்திரனும் உவமை என்க. நீர் - கடலுக்கு ஆகுபெயர். இங்கு இலக்கணையால் பாற்கடலைக் குறித்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Ilakkuvaṉ, here lies a bow, as strong as the mountain
- the gods used to churn the sea, lying here; in its shape
- it looks like a crescent of the moon; see how great was the might
- of the one who bit it and broke it!, he said, and stood gazing.
What the poem says
Irāmaṉ points out the broken bow to his brother. It is as massive as Mount Mandara, which the gods used as a churning rod when they churned the ocean of milk, and its curve is like the crescent moon. Think how strong Caṭāyu must have been to bite such a bow in two, he says, and stands lost in thought about the old bird's might.