கம்பராமாயணம் 3575 · ஆரணிய 8.173

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நின்று , பின்னரும் நெடு நெறி கடந்து உற நிமிரச்
சென்று நோக்கினர் , திரிசிகைத் திணி நெடுஞ் சூலம்
ஒன்று , பல் கணை மழை உறு புட்டில் ஓர் இரண்டு
குன்று போல் அவண் கிடந்த கண்டு அதிசயம் கொண்டார் .

பொருள் · Meaning in Tamil

நின்று - (அவ்வாறு எண்ணிக் கொண்டு) நின்று; பின்னரும் நெடுநெறி கடந்து - (அதற்குப்) பின்பு நீண்ட வழியைக் கடந்து; நிமிர உறச் சென்று - நேராக (தெற்கு திசையில்) நீண்ட தூரம் சென்று; திரி சிகைக் கொடு நெடுஞ்சூலம் ஒன்று - மூன்று தலையை உடைய கொடுமையான பெரிய சூலம் ஒன்றினையும்; பல்கணை மழை உறுபுட்டிலோடு இரண்டு - பல அம்புகளின் தொகுதி நிறைந்துள்ள அம்பறாத்தூணியாகிய இரண்டினையும்; குன்று போல்வன கிடந்த கண்டு - மலைகள் போல் கிடந்தவற்றைக் கண்டு; அதிசயம் கொண்டார் நோக்கினர் - வியப்புக் கொண்டவர்களாய்ப் பார்த்தனர்.

நீண்ட தூரம் தெற்கே நேராகச் சென்று முத்தலைச் சூலம், அம்பு அறாத் தூணி ஆகியவை விழுந்து கிடந்ததைக் கண்டு வியப்போடு நோக்கி நின்றனர். சிகை - தலை, உச்சி. மழை - தொகுதி. அந்தாதித் தொடை காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Standing so, and then going on along the long road, straight ahead,
  2. they looked, and saw lying there a single long cruel trident with three prongs,
  3. and two quivers holding a rain of many arrows,
  4. like hills, and they were filled with wonder.

What the poem says

After pausing, the brothers press straight on southward and find more debris of the battle: Irāvaṇaṉ's great three-pronged trident, and two quivers crammed with arrows, lying on the ground like hills. They stare in astonishment. The verse opens with the word on which the previous one ended.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1niṉṟu, piṉṉarum neṭu neṟi kaṭantu uṟa nimirac
ceṉṟu nōkkiṉar, tiri cikaik koṭu neṭuñ cūlam
oṉṟu, pal kaṇai maḻai uṟu puṭṭilōṭu iraṇṭu
kuṉṟu pōlvaṉa kiṭanta kaṇṭu aticayam koṇṭār.