கம்பராமாயணம் 3576 · ஆரணிய 8.174
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மறித்தும் சென்றனர் - மீண்டும் (தொடர்ந்து) சென்றனர்; வானிடை வயங்குற வழங்கி - வானத்தில் விளக்கம் உண்டாகும் படி சஞ்சரித்து; எறிக்கும் சோதிகள் - ஒளி வீசுகிற சூரிய சந்திரர்கள்; யாவையும் தொக்கன எனலாம் - முதலிய எல்லாம் ஒருங்கே சேர்ந்தன என்று சொல்லுமாறு; நெறிக் கொள் கானகம் மறைதர - செல்லும் வழி உடைய காட்டு இடம் மறையுமாறு; நிருதர் கோன் நெஞ்சின் பறித்து வீசிய - அரக்கர் தலைவனாகிய இராவணனின் நெஞ்சில் இருந்து (சடாயு) பறித்து எறிந்திருந்த; கவசமும் கிடந்தது பார்த்தார் - கவசம் கிடந்ததையும் (இராமலக்குவர் இருவரும்) கண்டார்கள். மீண்டும் தொடர்ந்து சென்ற இராமலக்குவர் வானத்தில் சஞ்சரிக்கும் சூரிய சந்திரரும் பிற கோள்களும் ஒளியுடன் நிலத்தில் விழுந்தது போல விழுந்து கிடந்த இராவணனது மார்புக் கவசத்தைக் கண்டனர். மறித்தும் - மீண்டும். வயங்குற - விளக்கமாக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Again they went on; and, as though all the lights that move
- and blaze brightly across the sky had gathered together,
- hiding the forest track, they saw lying there the armour
- that had been torn from the chest of the lord of the demons and flung away.
What the poem says
Going further, the brothers find Irāvaṇaṉ's breastplate, which Caṭāyu ripped from his chest and tossed aside. It is so huge and so brilliant that it hides the forest path, as if the sun, the moon and all the bright bodies that travel the sky had fallen to earth together in one place.