கம்பராமாயணம் 3577 · ஆரணிய 8.175

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கான் கிடந்தது மறைதரக் கால் வயம் கலி மா
தான் கிடந்த உழி , சாரதி கிடந்துழி , சார்ந்தார் ;
ஊன் கிடந்து ஒளிர் உதிரமும் கிடந்துழி , உலகில்
வான் கிடந்தது போன்ற தேர் கிடந்துழி வந்தார் .

பொருள் · Meaning in Tamil

கான் கிடந்தது மறைதர - காடு உள்ள இடம் முழுவதும் மறையும்படி; கால் வயக் கலிமாத் தான் கிடந்துழி - காற்றுப் போல் விரைந்து செல்லும் வலிமை படைத்த கடிவாளத்தைப் பூண்ட குதிரைகள் விழுந்து கிடந்த இடத்தையும்; சாரதி கிடந்துழிச் சார்ந்தார் - சாரதி விழுந்து கிடந்த இடத்தையும் சென்று அடைந்தார்கள்; ஊன் கிடந்து ஒளிர் உதிரமும் கிடந்துளது - அந்த இடத்தில் தசையோடு பொருந்தி விளங்குகிற குருதி சிந்திக் கிடந்தது; உலகின் வான் கிடந்தது போல்வது கிடந்துழி - நில உலகில் (சூரிய சந்திரரும் நட்சத்திரங்களும் உடைய) வானம் கிடந்தது போல் (இராவணனது) ஒளியுடை அணிகலன்கள் பல கிடந்த இடத்திற்கு; வந்தார் - வந்தனர்.

தொடர்ந்து சென்ற இராமலக்குவர் குதிரைகள் விழுந்து கிடந்ததையும், தேர்ப் பாகன் இறந்து கிடந்ததையும், ஒளியுள்ள பல அணிகலன்கள் சிந்திக் கிடந்ததையும் கண்டனர். கால் - காற்று, வயக்கலிமா - வலிமை படைத்த கடிவாளத்தை உடைய விலங்கு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They reached the place where, hiding the whole forest, the strong bridled horses swift as wind
  2. lay, and where the charioteer lay;
  3. where flesh lay and blood gleamed; and they came
  4. to where there lay something like the sky itself lying upon the earth.

What the poem says

Next the brothers reach the spot where the sixteen wind-swift horses lie dead, covering the forest floor, and where the charioteer lies, amid flesh and glistening blood. Beyond that they come to a place strewn with Irāvaṇaṉ's gleaming ornaments, so many and so bright that it is as if the starry sky had fallen to the ground.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāṉ kiṭantatu maṟaitarak kāl vayak kalimāt
tāṉ kiṭantuḻic cārati kiṭantuḻic cārntār;
ūṉ kiṭantu oḷir utiramum kiṭantuḻi, ulakil
vāṉ kiṭantatu pōlvatu kiṭantuḻi vantār.