கம்பராமாயணம் 3579 · ஆரணிய 8.177
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இளையோய் - இளையவனே; தோள் அணிக்குலம் பல உள - தோள் வளைகளின் தொகுதி மிகுதியாகக் கிடக்கின்றன; வாள் இமைப்பன குண்டலத் தொகுதி பல உள - ஒளி விடுவனவாகிய காதணிகளின் தொகுதிகள் மிகுதியாக உள்ளன; மணிமுடி பலவால் - மணிகள் பதிக்கப் பெற்ற முடிகள் பல விழுந்து கிடக்கின்றன; நாள் அனைத்தையும் கடந்தனன் தமியன் நம் தாதை - நீண்ட நாட்கள் (வாழ்ந்து) கழித்தவனும், துணையற்றவனுமாகிய நமது தந்தை (சடாயு); பொருதனர் - போர் செய்தோர்; யாளி போல்பவர் பலர் உளர் - சிங்கம் போன்ற (வீரர்) பலர் உளர் போலும் (என்று இராமன் இலக்குவனை நோக்கிக் கூறினான்).
தோள் வளையங்களும், காதணிகளும் மணிமுடிகளும் பல சிந்தி விழுந்து கிடப்பதால் வயதான, துணையில்லாத நம் தாதையாகிய சடாயுவுடன் பொருதவர் பலர் போலும் என்று இராமன் இலக்குவனிடம் கூறினான். வாள் - ஒளி. நாள் அனைத்தையும் கடந்தனன் - மிக மிக வயதானவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- There are many armlets here; there are many sets of earrings
- flashing their light; there are many jewelled crowns;
- our father, who has outlived all his days, was alone;
- many fought him, men like yāḷis, younger brother!
What the poem says
Looking at the heaps of armlets, earrings and crowns, Irāmaṉ concludes that a whole band of fierce warriors, strong as yāḷis, the lion-like beasts of legend, must have fought Caṭāyu. And their father, as he calls him, was very old and all alone.