கம்பராமாயணம் 3580 · ஆரணிய 8.178

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''
''

பொருள் · Meaning in Tamil

திருவின் நாயகன் உரை செய - திருமகள் கேள்வனாகிய இராமன் (இவ்வாறு) சொல்ல; சுமித்திரை சிங்கம் - சுமித்திரையின் சிங்கம் போன்ற (மகனாகிய) இலக்குவன்; தருவின் நீளிய தோள் பல தலை பல என்றால் - மரங்கள் போல் நீண்டுள்ள தோள்கள் பல தலைகள் பல என்றால், தாதையைப் பொருது - தந்தையாகிய சடாயுவோடு போரிட்டு; இத்தனை நெறிக்கொடு போனான் - இத்தனை நீண்ட தூர வழியில் சீதையைக் கொண்டு போனவன்; ஒருவனே - ஒருவன் ஆகவே இருக்க வேண்டும் (பலர் அல்லர் என்றபடி); அவன் இராவணன் ஆம் என - அவன் (தோள் இருபதும் தலைகள் பத்தும் கொண்ட) இராவணனாதல் கூடும் என்று; உரைத்தான் - கூறினான்.

இராமன் கூறியதைக் கேட்ட இலக்குவன் பல தோளணிகளும், பல மகுடங்களும் கிடப்பதால் பல தோள்களும், பல தலைகளும் உடைய இராவணன் ஒருவனே சடாயுவொடு போரிட்டுச் சீதையை இவ்வளவு நீண்ட தூரம் கவர்ந்து வந்தவனாதல் வேண்டும் என்றான். திரு - திருமகள், தரு - மரம், இராமன் சீதையைப் பிரிந்து மனக் கலக்கம் அடைந்திருந்ததால் நடந்ததை ஊகிக்க முடியவில்லை என்றும் இலக்குவன் அறிவுக் கூர்மையும் கலங்காத மனமும் உடையவனாய் இருந்ததால் இவ்வாறு சரியாக ஊகித்து உணர்ந்து கொண்டான் எனலாம். மாரீசன் பொன் மானாக வந்த போதும், அவன் இராமன் அம்புபட்டு இறக்கும் தறுவாயில் வஞ்சனை ஒலி எழுப்பிய போதும் இலக்குவன் சரியாக ஊகித்தமை அவனது நுண்ணறிவுத் திறத்தைக் காட்டும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the lord of Śrī said this, the lion of Cumittirai
  2. replied, If there are many shoulders long as trees, and many heads,
  3. then the one who fought our father and carried her off this far
  4. is a single person; it must be Irāvaṇaṉ.

What the poem says

Ilakkuvaṉ, son of Cumittirai and brave as a lion, sees the matter more clearly. If there are many arm ornaments and many crowns, that points to many arms and many heads, not to many people. The one who fought Caṭāyu and carried Cītai so far must be a single being: Irāvaṇaṉ, with his twenty arms and ten heads.

Irāmaṉ, distraught at losing Cītai, could not reason it out, while Ilakkuvaṉ, clear-headed, could. He had also seen through the golden deer and recognised Mārīcaṉ's false cry.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tiruviṉ nāyakaṉ uraiceyac cumittirai ciṅkam,
'' taruviṉ nīḷiya tōḷ pala, talai pala eṉṟāl,
porutu tātaiyai ittaṉai neṟik koṭu pōṉāṉ
oruvaṉē; avaṉ irāvaṇaṉ ām '' eṉa uraittāṉ.