கம்பராமாயணம் 3581 · ஆரணிய 8.179
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மடல் உள் நாட்டிய தார் இளையோன் - பூவிதழ்கள் உள்ளே அமையத் தொடுக்கப்பட்ட மார்பு மாலையை அணிந்த இளையவனாகிய இலக்குவன் (கூறிய); சொலைமதியா - சொற்களை மதித்து (ஏற்று); மிடலுண் நாட்டங்கள் தீ உக நோக்கினன் - (காணும்) வலிமை அமைந்த கண்களில் சினத் தீ வெளிப்படப் பார்த்தவனாகி, விரைவான் - விரைந்து செல்லுகின்றவனாகிய இராமன்; உடலுள் நாட்டிய குருதி அம் பரவையின் உம்பர் - உடலில் இருந்து வெளிப்பட்ட இரத்தமாகிய கடலுக்கு மேல்; கடலுள் நாட்டிய மலையன்ன - கடலுள் (மத்தாக) நாட்டிய மந்தரமலையை ஒத்த; தாதையைக் கண்டான் - தந்தையாகிய சடாயுவைக் கண்டான்.
இலக்குவன் சொல்லை ஏற்றுச் சென்ற இராமன், கடலில் மத்தாக அமைக்கப்பட்ட மந்தரமலை போல் தன் உடம்பில் இருந்து வெளிப்பட்ட குருதிக் கடலிடைக் கிடந்த சடாயுவைக் கண்டான். மடல் - பூவிதழ்கள், தார் - மார்புமாலை. மிடல் - வலிமை, ஈண்டுப் பார்வைச் சிறப்புக்கு அடையாக வந்தது. நாட்டம் - கண், பரவை - கடல். உம்பர் - மேல், கடல் - திருப்பாற்கடல். தார் இளையோன் - இரண்டாம் வேற்றுமைத் தொகை, சொலை - இடைக்குறை. நோக்கினான் - முற்றெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Heeding the words of the younger one, whose garland was strung with petals set within,
- he hurried on, looking about with keen eyes from which fire poured,
- and above a lovely sea of blood that had flowed from the body,
- he saw his father, like the mountain planted in the ocean.
What the poem says
Accepting Ilakkuvaṉ's reasoning, Irāmaṉ hurries on, his eyes blazing. At last he sees Caṭāyu, lying in a sea of his own blood, like Mount Mandara planted in the ocean of milk as the churning rod when the gods churned it.