கம்பராமாயணம் 3582 · ஆரணிய 8.180

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஓங்கிய அமலன் - உயர்ந்தவனும் மலமற்றவனுமாகிய இராமன்; ஓங்கு செந்தாமரை நயனங்கள் - சிறப்பான செந்தாமரை போன்ற (தன்) கண்கள்; துள்ளி சொரிய தள்ளி - கண்ணீரை மிகுதியாகச் சொரியுமாறு பெருக்கிக் கொண்டு; தன் தனி உயிர்த்தந்தை - தன் சிறப்பான உயிர் போன்ற தந்தையும்; வள்ளியோன் - வண்மைப் பண்பு மிகக் கொண்டவனுமாகிய சடாயுவின்; திருமேனியில் - உடலின் மீது; தழல்நிற வண்ணன் - நெருப்பின் நிறம் போன்று சிவந்த நிறத்தை உடைய சிவபெருமானின்; வெள்ளி ஓங்கலில் - வெள்ளி மலையின் மீது; அஞ்சன மலை என வீழ்ந்தான் - மையால் இயன்ற மலை வீழ்ந்தது போல விழுந்தான்.

குருதிக் கடலிடைத் தாதையைக் கண்ட இராமன் தன் செந்தாமரை மலர் போன்ற கண்களில் கண்ணீர் பெருக வெள்ளி மலையின் மீது அஞ்சன மலை விழுந்தது போலச் சடாயுவின் உடல் மீது விழுந்தனன். வெள்ளி மலை - சடாயுவின் உடல் நிறத்துக்கும் வடிவத்துக்கும், அஞ்சனமலை - இராமனின் உடல் நிறத்துக்கும் வடிவத்துக்கும் உவமை என்க. வள்ளியோன் - வள்ளல் தன்மை உடைய சடாயு. தன் உயிரைப் புகழ்க்கு விற்று உயிர் கொடுத்துப் புகழ் கொண்டவனாதலில் இவ்வாறு கூறினார். துள்ளி - விரித்தல் விகாரம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His lofty red-lotus eyes pouring out drops,
  2. the exalted, spotless one, upon the sacred body of his father,
  3. dear to him as his own life, that generous one, fell,
  4. like a mountain of collyrium falling on the silver mountain of the fire-coloured god.

What the poem says

Irāmaṉ, tears streaming from his lotus eyes, throws himself on the body of Caṭāyu, whom he loves like a father and as his own life. Dark Irāmaṉ falling on the great white bird looks like a mountain of black collyrium falling onto Kailāsa, the silver mountain of fire-coloured Śiva.

Caṭāyu is called the generous one because he gave his very life in exchange for glory.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tuḷḷi, ōṅku cen tāmarai nayaṉaṅkaḷ coriya
taḷḷi, ōṅkiya amalaṉ taṉ taṉi uyirt tantai
vaḷḷiyōṉ tiru mēṉiyil taḻal niṟa vaṇṇaṉ
veḷḷi ōṅkalil añcaṉa malai eṉa vīḻntāṉ.