கம்பராமாயணம் 3583 · ஆரணிய 8.181
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒரு நாழிகை உயிர்த்திலன் - (இராமன் சடாயுவினது உடலின் மீது விழுந்து) ஒரு நாழிகை அளவு மூச்சற்றவனானான்; உணர்விலன் கொல் என்று அயிர்த்த தம்பி - (அதுகண்டு) உணர்ச்சியற்று மயங்கினான் போலும் என்று ஐயங்கொண்ட தம்பியாகிய இலக்குவன்; புக்கு - சென்று; அம் கையின் எடுத்தனன் - (இராமனைத் தன்) அழகிய கைகளால் (தழுவி) எடுத்து; புயல் அருவி கலந்த நீர் தெளித்தலும் - மேகத்தில் இருந்து மலை அருவியாக வந்த நீரை (முகத்தில்) தெளித்த உடனே; புண்டரீகக் கண் பெயர்த்து - தன் தாமரை போன்ற கண்களைத் திறந்து; பைப்பைய அயர்வு தீர்ந்து - மெதுவாகச் சோர்வு நீங்கி; இனையன பேசும் - இச் சொற்களைக் கூறத் தொடங்கினான்.
சடாயுவின் உடல் மீது விழுந்த இராமன் உயிர்ப்பும் உணர்வும் அற்றவனாய் இருத்தலைக் கண்ட துணைத் தம்பியாகிய இலக்குவன் நீரினைத் தெளித்ததனால் மெல்ல மெல்ல உணர்வைத் திரும்பப் பெற்ற இராமன் கீழ் வரும் சொற்களைக் கூறத் தொடங்கினான் என்க. உயிர்ப்பு - மூச்சு. அயிர்த்த - ஐயம் கொண்ட, புயல் - மேகம். பைப்பைய - மெல்ல மெல்ல. கொல் - ஐயப்பொருள் தருவதோர் இடைச் சொல். இனையன - குறிப்பு வினையாலணையும் பெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- For a nāḻikai he did not breathe; Has he lost consciousness?,
- his brother wondered, and going to him lifted him in his fair hands, and when he sprinkled
- water from the cloud-fed waterfall on him, he opened his lotus eyes,
- and slowly, his faintness passing, he spoke these words.
What the poem says
Irāmaṉ lies on Caṭāyu's body without breathing for a nāḻikai, about twenty-four minutes. Ilakkuvaṉ, fearing he has fainted, lifts him in his arms and sprinkles his face with water from a mountain stream. Slowly Irāmaṉ opens his lotus eyes, recovers, and begins the lament that follows.