கம்பராமாயணம் 3585 · ஆரணிய 8.183

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

எந்தாயே - எனது தந்தையே; பெண்பாலாள் தன் உறுவல் தீர்ப்பான் - பெண்ணாகிய சீதை (மாயமானிடம் மயக்கம் கொண்டு அடைந்த) துன்பத்தைத் தீர்ப்பதற்காக; பின் உறுவது ஓராதே பேதுறுவேன் - (அம்மானின் பின் சென்று அதனால்) பின்வரும் விளைவுகளைப் பற்றி எண்ணாமல் மயக்கம் கொண்டு வருந்துபவனாகிய யான்; தனி உறுவது ஓராதே - ஒரு துணையும் இன்றித் தனியாக நிற்பதைப் பற்றி எண்ணாமல் (இராவணனிடம் போரிட்டு), உன் உறவு நீ தீர்த்தாய் - உன் உறவின் கடமையை நீ தீர்த்துக் கொண்டாய்; ஓர் உறவும் இல்லாதேன் - எந்த வகை உறவுகளும் இல்லாத நான்; என் உறுவான் வேண்டி இடர் உறுவேன் - என்ன பயனை அடைய விரும்பி (இப்பொழுது) துன்பம் அடைகிறேன்.

பெண்பாலாள் துன்பத்தைத் தீர்ப்பதற்காக எண்ணிப் பாராமல் மாய மானின் பின் நான் சென்றேன். ஆனால் நீயோ துணையின்றித் தனியாக இருப்பதைப் பற்றி எண்ணாமல் உன் உறவின் கடமையைத் தீர்த்தாய். அவ்வாறு எதையும் செய்யாத நான் என்ன காரணத்தால் இப்பொழுது துன்பம் அடைகிறேன் என்று இராமன் புலம்பினான் என்க. ஓராது - எண்ணாமல். பேதுறுதல் - மயங்குதல். உறுவல் - துன்பம். பேதுறுவேன் - முற்றெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. I, the fool, never weighing what would follow,
  2. went to end the woman's longing; you, never weighing that you stood alone,
  3. fulfilled the duty of your kinship; I, who have kept faith with no kin at all,
  4. what do I hope to gain by suffering on, my father?

What the poem says

Irāmaṉ contrasts himself with Caṭāyu. He foolishly ran after the deer to satisfy Cītai's wish, without thinking of the consequences. Caṭāyu, without a thought for the fact that he was fighting alone, paid in full the debt of friendship he owed. Irāmaṉ feels he has done his duty by no one, and asks what he can hope to gain by living on in this misery.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' piṉ uṟuvatu ōrātē pētuṟuvēṉ, peṇpālāḷ
taṉ uṟuval tīrppāṉ, taṉi uṟuvatu ōrātē,
uṉ uṟavu nī tīrttāy; ōr uṟavum illātēṉ
eṉ uṟuvāṉ vēṇṭi iṭar uṟuvēṉ? entāyē! ''