கம்பராமாயணம் 3586 · ஆரணிய 8.184
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாண்டேனே அன்றோ - (இத்தகு செயல்களுக்குக் காரணமான நான்) இறந்தவனையே ஒத்தவனல்லவா? (அவ்வாறு இறக்காமல் இருப்பதற்குக் காரணம்); மறையோர் குறை முடிப்பான் - வேதத்தில் வல்ல முனிவர்களது குறைகளை நீக்குவதான; விரதம் பூண்டேன் - விரதத்தைக் கைக் கொண்டுள்ளேன்; அதனால் உயிர் பொறுப்பேன் - அதனால் உயிரை (உடலில்) கொண்டவனாக; நீண்டேன் - வாழ் நாள் நீட்டிக்கப் பெற்றுள்ளேன்; மரம்போல நின்று - மரம் போல வளர்ந்து நின்று; ஒழிந்த - யாது ஒரு பயனும் இல்லாத; புன்தொழிலேன் - புல்லிய தொழிலை உடையவனாகிய நான்; இம் மா மாயப் புன் பிறவி - இந்த மயக்கம் நிறைந்த இழி பிறப்பை; வேண்டேன் வேண்டேனே - விரும்பேன் விரும்பேன்.
முனிவர் குறை தீர்க்க விரதம் பூண்டதே காரணமாக வாழ வேண்டியிருக்கிறதே என்று தன் வாழ்வையே வெறுத்துப் பேசுகிறான். வேண்டேன் வேண்டேனே என்ற அடுக்கு வாழ்க்கை மீது கொண்ட வெறுப்பைக் குறித்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Am I not as good as dead? I took a vow
- to end the troubles of the sages; for that I bear my life;
- I, of base deeds, who have grown tall and stood like a tree, useless,
- I do not want it, I do not want this great, deluding, wretched birth!
What the poem says
Irāmaṉ feels he is as good as dead. The only reason he stays alive is the vow he made to the forest sages to rid them of the demons who torment them. Otherwise he has merely grown tall like a tree, standing there and doing no good to anyone.
He wants nothing to do with this deluded, miserable human life; the repeated I do not want shows how deep his disgust runs.