கம்பராமாயணம் 3589 · ஆரணிய 8.187

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்னா பலபலவும் பன்னி அழும் ; மயங்கும் ;
தன் நேர் இலாதான் தன் தம்பியும் அ தன்மையன் ஆ ;
உன்னா , உணர்வு சிறிது உள் முளைப்பப் புள் அரசும் ,
இன்னா உயிர்ப்பான் , இருவரையும் நோக்கினான் .

பொருள் · Meaning in Tamil

தன் நேர் இலாதானும் - தனக்கு ஒப்பு தான் தானேயன்றிப் பிறரில்லை எனும்படியானவனான இராமனும்; அன்னா - அத்தகையதான (சொற்கள்); பலபலவும் பன்னி அழும் - பலவற்றைத் திரும்பத் திரும்பச் சொல்லி அழுவான்; மயங்கும் - அறிவு மயக்கம் கொள்வான்; தம்பியும் - தம்பியாகிய இலக்குவனும்; அத்தன்மையனாய் - அந்த (அழுது மயங்கும்) நிலை உடையவனாக, புள்ளரசும் - கழுகரசன் ஆகிய சடாயுவும்; உள் சிறிது உணர்வு முளைப்ப - உள்ளத்தில் சிறிதளவு உணர்வு தோன்ற, உன்னா - நினைப்பு வரப்பெற்று; இன்னா உயிர்ப்பான் - துன்பத்துடன் மூச்சுவிடுபவனாகி; இருவரையும் நோக்கினான் - (தன்னைச் சூழ்ந்துள்ள இராமலக்குவர்) இருவரையும் கண் திறந்து பார்த்தான்.

தனக்குத் தானே ஒப்பானவனான இராமனும் தம்பியும் அழுது மயங்கினர். அந்நிலையில் சடாயு சிறிது உணர்வு பெற்றுத் துன்பப்பட்டு மூச்சு விட்டுக் கொண்டு அவ்விருவரையும் பார்த்தான். பன்னி - திரும்பத் திரும்பச் சொல்லி, உன்னா - நினைவு பெற்று; இன்னா - துன்பம். அன்னா - குறிப்பு வினையாலணையும் பெயர். அன்ன என்பது எதுகை நோக்கி நீண்டது என்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Saying such things over and over, he who has no equal wept and swooned,
  2. and his brother was in the same state;
  3. then, as a little awareness stirred within him, the king of birds too came to himself,
  4. breathing in pain, and looked at the two of them.

What the poem says

Irāmaṉ, who has no equal but himself, keeps repeating his laments, weeping and fainting, and Ilakkuvaṉ is in the same state. Then a flicker of awareness returns to Caṭāyu. Breathing with difficulty and in pain, the vulture king opens his eyes and looks at the two brothers bending over him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉā pala palavum paṉṉi aḻum; mayaṅkum;
taṉ nēr ilātāṉum tampiyum at taṉmaiyaṉāy;
uṉṉā, uṇarvu ciṟitu uḷ muḷaippap puḷḷaracum,
iṉṉā uyirppāṉ, iruvaraiyum nōkkiṉāṉ.